தஞ்சையில் இருவேறு இடங்களில் கல்லணைக்கால்வாயில் மூழ்கி 2 பேர் பலியான சோகம்

5 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கல்லணைக்கால்வாயில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்ன காங்கேயம் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் அந்தோணி (40). ஜேசிபி ஆபரேட்டர். இவரது மனைவி பேபி ஷாலினி (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் அந்தோணி மற்றும் பேபி ஷாலினி இருவரும் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இதில் அந்தோணி ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து கதறி துடித்த பேபி ஷாலினி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இருப்பினும் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட அந்தோணியை யாராலும் மீட்க முடியவில்லை.

இரவு நேரம் என்பதால் வெளிச்சம் போதாமல் ஆற்றில் அந்தோணியை தேட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை  திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அந்தோணியை தேடினர். இதில் பூதலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் சித்திரக்குடி பாலம் பகுதியில் அந்தோணி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் தஞ்சாவூர் அருகே மேல மானோஜிப்பட்டி பகுதியில் கல்லணை கால்வாயில் நண்பர்களுடன் குளித்த பட்டதாரி வாலிபர் ஆற்றில் மூழ்கி இறந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி விநாயகம் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் லோகேஷ் (19). பிஎஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று (10ம் தேதி) மாலை தனது நண்பர்களுடன் மேல மானோஜிப்பட்டி பகுதியில் கல்லணை கால்வாயில் குளித்து கொண்டு இருந்தார்.

தண்ணீரின் வேகம் அதிகம் இருந்த நிலையில் லோகேஷ் மற்றும் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் லோகேஷ் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. உடன் இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் மற்றும் தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் வெளிச்சம் போதாத நிலையில் லோகேசை தேட முடியாத நிலையில் திரும்பி சென்றுவிட்டனர். தொடர்ந்து இன்று 11 ம் தேதி காலை கல்லணை கால்வாய் ஆற்றில் லோகேஷை தேடும் பணியில் தஞ்சாவூர் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே செல்லம்பட்டி பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் ஒரு ஆண் சடலம் செல்வதாக அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் அந்த சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் செல்லம்பட்டிக்கு  லோகேஷ் உறவினர்கள் விரைந்து சென்று அது லோகேஷ்தான் என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read Entire Article