தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்த வேட்பாளர்கள்

1 hour ago 1
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கட்சிகளின் வேட்பாளர்கள் காலையிலே மக்களுடன் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மற்றும் அவரது  குடும்பத்தினர் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப தொடக்கநிலைப்பள்ளியில் முதல் முதலாக வந்து தங்களது முதல் வாக்கு பதிவு செய்தனர்.

ஒரத்தநாடு திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் திருவையாறு தொகுதிக்குட்பட்ட கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிராமங்கள்  தோறும் காலை முதலே முதியவர்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. மீண்டும் 7 வது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தனது வாக்கை சரபோஜி கல்லூரியில் அமைக்கப்பட்டு  இருந்த வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நிச்சயமாக இந்த முறை தமிழகத்தில் அதிகமான வாக்குப்பதிவு நடைபெறும். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துவதில் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார். திரைப்பட நடிகரும் தஞ்சை மத்திய மாவட்ட தி மு க.வர்த்தக அணி அமைப்பாளருமான துரை. சுதாகர் தஞ்சை சரபோஜி கல்லூரி வாக்கு சாவடி மையத்தில் அவரது வாக்கை  செலுத்தினார். இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி தனது கணவருடன் சரபோஜி கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதேபோல் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை. க. அன்பழகன் இன்று தனது வாக்கினை சாக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பகுத்தறிவு தொடக்கப் பள்ளியில் வரிசையில் நின்று செலுத்தினார். கும்பகோணம் அருகே சோழபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தனது குடும்பத்தினருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வாக்களித்தார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில்,  கடந்த கால தேர்தல்களை விட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. இது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. இது தமிழகத்திற்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

தமிழ்நாடு யாருக்கும் அடிமை இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உலகிற்கு உணர்த்தும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார். திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாகத் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 11 நிலவரப்படி, கும்பகோணம்-  36.06%,  ஒரத்தநாடு - 39.05%, பாபநாசம் தொகுதி -  34.73%., பட்டுக்கோட்டையில் 36.55%, பேராவூரணி தொகுதி 38.51%, தஞ்சாவூர் தொகுதி 36.36%, திருவையாறு தொகுதி 37.15%, திருவிடைமதூர் 34.45% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஒரத்தநாடு தொகுதியில்தான் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article