வெயிலுக்கு பயந்த வாக்காளர்கள்... மதிய நேரத்தில் வெறிச்சோடிய வாக்குப்பதிவு மையங்கள்

2 hours ago 1
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மிரட்டிய வெயிலுக்கு பயந்து வாக்காளர்கள் காலையிலேயே தங்களின் வாக்குகளை பதிவு செய்ததால் மதிய நேரம் பல வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் காலை முதல் வெகு விறுவிறுப்பாக வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 3 நாட்களாகவே அதிகளவில் வெயில் தாக்கம் இருந்ததால் இன்று காலையிலேயே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் காலை 11 மணிக்கே 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. இந்நிலையில் ஒரத்தநாடு தொகுதியில் கா.கோவிலூரில் காலையிலேயே அதிகளவிலான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் மதியம் நேரத்தில் வாக்காளர்கள் யாரும் இல்லாமல் வாக்குப்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு வாக்குப்பதிவு மையங்களிலும் மதிய நேரம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதியில் பெண்கள் அதிகளவில் வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் வருகை தந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் ஒரத்தநாடு வாக்குச்சாவடி மையத்தில் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதேபோல் ஒரத்தநாடு புதூர் வாக்குச்சாவடி மையத்தில் 81 வயதான நடக்க இயலாத மூதாட்டி அஞ்சலை என்பவர் தனது பேத்தியுடன் வந்து சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரது ஜனநாயக கடமையை கண்டு அங்கிருந்த அனைவரும் வியப்படைந்தனர். மேலும் முதல்முறையாக வாக்கு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்த தேவிப்பிரியா கூறுகையில், இது ஒரு புது அனுபவம் என்று தெரிவித்தார்.

ஒரத்தநாடு வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்ய வந்த பாலகிருஷ்ணன் (75) இதுவரை நான் 10க்கும் அதிகமான தேர்தல்களை சந்தித்துள்ளேன். எனது வாக்கை பதிவு செய்யாமல் இருந்ததில்லை. அதனால்தான் எனது பேரனுடன் வந்து எனது வாக்கை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதியம் 1 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 54.83% வாக்குப்பதிவாகியிருந்தது. கும்பகோணம் தொகுதி -  54.17%, ஒரத்தநாடு தொகுதி - 58.58% , பாபநாசம் தொகுதி -  53.04%, பட்டுக்கோட்டை ொகுதி 53.60 %, பேராவூரணி தொகுதி 57.30%, தஞ்சாவூர் தொகுதி 53.54% , திருவையாறு தொகுதி 56.72%,  திருவிடைமதூர் தொகுதி 52.32% என வாக்குகள் பதிவாகி இருந்தது.

Read Entire Article