செம! TVS Raider 125 பைக்கில் புதியதாக 2 வேரியண்ட்கள்! கலரும் கவர்ச்சியா இருக்குதே!

1 hour ago 1
ARTICLE AD

இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் விற்பனை நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

TVS Raider 125:

இவர்களின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று TVS Raider 125. நல்ல மைலேஜ், பட்ஜெட் விலை, பயன்பாட்டிற்கும் சிறந்தது என்பதால் இந்தியாவில் அதிகளவு விற்பனையாகி வரும் இரு சக்கர வாகனத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் TVS Raider 125 பைக்கில் புதியதாக 2 வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதியதாக 2 வேரியண்ட்கள்:

தற்போது இந்த TVS Raider 125 பைக்கில் Raider 125 Drum,  Raider 125 Single Seat - Disc,  Raider 125 Split Seat - Disc, Raider 125 iGO - Boost Mode, Super Squad Edition ஆகிய வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. தற்போது புதியதாக   SXC DD மற்றும் TFT DD ஆகிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய வேரியண்டான TFT DD விலை ரூபாய் 98 ஆயிரத்து 550 என்றும், இந்த SXC DD விலை ரூபாய் 96 ஆயிரத்து 725 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் பச்சை நிறத்தில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. டாப் ரியண்டில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.  SXC DD இதில் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

வேகம்:

இதில் 124.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் இதில் உள்ளது. 11.38 பிஎஸ் ஆற்றல் கொண்டது. 11.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5.8 நொடிகளில் 60 கி.மீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. முன்பக்கம் 240 மி.மீட்டர் டிஸ்க்கும், பின்பக்கம் 200 மிமீட்டர் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் வசதி உள்ளது.

ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 567 கிலோமீட்டர் வரை செல்லலாம். பிஎஸ்6 எமிஷனுக்கு ஏற்றவகையில் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. 1 சிலிண்டர் 3 வால்வுகள் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் சக்கரம் முன்பக்கமும், பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் டேங்கர் 1.6 லிட்டர் வரை தாங்கும் திறன் கொண்டது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது.  இதன் பெட்ரோல் டேங்கர் 10 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது.  மைலேஜ் 56.7 கிலோமீட்டர் வரை தருகிறது. வசீகரமான தோற்றத்தாலும், போதுமான மைலேஜ் காரணமாகவும் இந்த பைக்கை பலரும் விரும்புகின்றனர்.

Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?

Read Entire Article