ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !

2 months ago 4
ARTICLE AD

வங்கி கணக்குகள் மற்றும் UPI ஐடிகளுக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.61,73,461 பணத்தை அனுப்பியுள்ளார்.

ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.61.73 லட்சம் மோசடி

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்த கணேஷ் (28) என்பவரை, LinkedIn மற்றும் WhatsApp மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.61,73,461 பணத்தை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி, +33753535957 மற்றும் +491638981208 ஆகிய எண்களில் இருந்து கணேஷை தொடர்புகொண்ட நபர்கள், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக ஆவணக் கட்டணம் (Document Charges), காப்பீடு (Insurance), விசா (Visa), மருத்துவப் பரிசோதனை (Medical) மற்றும் பாதுகாப்பு வைப்பு (Security Deposit) உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டுள்ளனர்.

சைபர் கிரைம் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு

இதனை நம்பிய கணேஷ், அவர்கள் வழங்கிய வங்கி கணக்குகள் மற்றும் UPI ஐடிகளுக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.61,73,461 பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் வேலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் நடைபெறாத நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து கணேஷ் சிவகங்கை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article