பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மூன்று மாதங்கள் சபரிமலை சீசன் என்பதால் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஜோதியை காணவும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் தனியார் வாகனங்கள் மூலம் வருகை புரிகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தும் சபரிமலையில் விமான நிலையம் இல்லாததால், இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

இந்நிலையில் சபரிமலையில் சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 2,569 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி தெற்கு கிராமங்களில் இருந்து 1039.876 ஏக்கர் நிலங்கள் கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமான நிலைய கட்டுமான பணிக்காக மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள் என்றும் 2492 தேக்கு மரங்கள் என்றும் 2247 காட்டு பலாமரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

மேலும் 828 மகோகனி மரங்கள், 1131 பலாமரங்கள் மற்றும் 184 மாமரங்கள் வெட்டப்படும் என்றும் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படும் என்றும் இருப்பினும் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் 238 குடும்பங்கள் உட்பட 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விமான நிலையம் உள்ளூர் வணிகம் மேம்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.