சட்டவிரோத சூதாட்ட செயலி.. நடிகர்கள் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மீது வழக்கு!

5 months ago 5
ARTICLE AD

சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த புகார் தொடர்பாக, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டிவிரோதமாக பண பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் விசாரணை
மேற்கொண்டனர்.

பணத்தை இழந்த நபர் புகார்

விசாரணையில் மேலே குறிப்பிட்டுள்ள சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. மேலும், திரை பிரபலங்கள் நடித்த விளம்பரத்தை நம்பி ஒருவர் சூதாட்ட செயலியில் ரூ.3 கோடி வரை பணத்தை இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, தமன்னா, பிரகாஷ் ராஜ் உள்படல  29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

சட்டவிரோதமாக ஊதியம்

சூதாட்ட செயலியில் நடித்த பிரபலங்களுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் கிடைத்த வருவாய் மூலமே நடிகர்களுக்கு ஊதியமாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 29 பிரபலங்களுக்கும் இந்த வாரத்தில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளனர்.

Read Entire Article