கேரள மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தனியார் பேருந்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கேரளா, பொதுவாகப் பாராட்டப்படும் ஒரு கல்வி, சுகாதாரம், சமூகநீதி முன்நிலை மாநிலம். இன்றைய வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனர். இன்று ஜூலை 9ல் நடைபெறும் மற்றும் நாளை 10ம் தேதிகளில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய வேலைநிறுத்தங்கள் என்றே கூறலாம். முதலில் இன்று மாநிலம் முழுக்க தனியார் பேருந்து சங்கங்கள் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடத்துகின்றன. கேரளாவில் தினசரி 12,000க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவை மாணவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்களுக்கெல்லாம் முதன்மை போக்குவரத்து வசதி. ஆனால் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு செலவுகள் போன்ற காரணங்களால் தற்போதைய கட்டணம் போதவில்லை என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க வேண்டும். காப்பீடு பிரீமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்தல் வேண்டும். நஷ்ட ஈடு அல்லது அரசின் நேரடி உதவி வேண்டும். இதுதான் பிரச்சனையா என அதிகாரிகள் நெருக்கடி பேச்சுவார்த்தை நடத்தினாலும், சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை விட்டு மாறவில்லை. இதனால் இன்று தனியார் பேருந்துகள் ஓடாமல் போனால், கேரள அரசு பேருந்துகள் மட்டுமே சேவை செய்யும் நிலை ஏற்படும். அவற்றும் போதாமல், அதிக சிரமம், கூட்டம், பரபரப்பு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவில் புதன் இன்று தனியார் பேருந்துகள் இயங்காது என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கத் தவறினால் ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.

முக்கிய கோரிக்கைகளாக காலாவதியான பெர்மிட்களை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும், குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கக்கூடிய பேருந்துகளை சாதாரண பேருந்துகளைப் போல் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சொல்லும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், மாணவர்களுக்கான கட்டணச் சலுகை விகிதங்களை திருத்த வேண்டும், காவல் துறையிடம் பேருந்து தொழிலாளர்கள் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்து போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் கேரளாவில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் நிமித்தமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை பொறுத்தவரை அரசு பேருந்துகளை விட பொதுமக்கள் தனியார் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளையும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் 24 மணி நேர தேசிய வேலைநிறுத்தம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.