குரங்கை பிடித்து சித்ரவதை செய்த 3 பேர்... அதிரடி நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் வனத்துறை

2 months ago 4
ARTICLE AD

பெரம்பலூர்: பெரம்பலூரில் குரங்கை பிடித்து மனிதநேயமின்றி கொடூரமாக சித்ரவதை செய்த மூவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்த குரங்கை பிடித்துக் கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 நபர்களுக்கு வனத்துறையினர் மொத்தம் ரூ.50,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி இதுதாங்க

பெரம்பலூர் அருகே அமைந்துள்ள கீழக்கணவாய் கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்து வந்துள்ளன. பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருந்த இந்தக் குரங்குகளைப் பிடிப்பதற்காக, திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஜீவா மற்றும் ப. சின்னதுரை ஆகிய இருவரையும் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவழைத்துள்ளார்.

கொடூரமான சித்ரவதையும் சமூக வலைதளப் பதிவும்

குரங்குகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, பிடிபட்ட குரங்குகளில் ஒன்றை அவர்களில் ஒருவர் மிகக் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார். இந்தக் கொடூரச் செயலை, அதே கல்லூரியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மொபைல் போன் மூலம் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோ காட்சிகளை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இணையத்தில் வேகமாகப் பரவிய அந்த வீடியோ காட்சி, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை அலுவலர்கள் கடந்த திங்கள்கிழமை உடனடியாகக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி முதல்வரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குரங்கு பிடிக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்ட அந்த வீடியோ சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

மேலும், கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே காவலாளி செந்தில்குமார் அண்மையில் அந்த வீடியோவைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இயற்கையையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பது சட்டப்படி மிக முக்கிய கடமையாகும். அதனடிப்படையில், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.

விலங்கைச் சித்ரவதை செய்த ஜீவா மற்றும் சின்னதுரை ஆகிய இருவருக்கும் தலா ரூ.20,000 அபராதமும், அதைத் தடுக்காமல் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பரப்பிய கல்லூரி காவலாளி செந்தில்குமாருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.50,000 அபராதத் தொகையை வனத்துறையினர் நேற்று வசூலித்து மூன்று பேருக்கும் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் விடுத்த அறிவிப்பு

வனவிலங்குகளைப் பிடிப்பதற்கோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ உரிய வனத்துறை அதிகாரிகளின் அனுமதியின்றித் தனியார் நபர்களை ஈடுபடுத்துவதும், விலங்குகளைத் துன்புறுத்துவதும் சட்டப்படி கடுமையான குற்றமாகும். வன உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Read Entire Article