குப்பை அல்ல... ‘தங்கம்’! தஞ்சாவூரில் கிலோ ரூ.10-க்கு இயற்கை உரம்!

2 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை பயனுள்ள இயற்கை வளமாக மாற்றி, தரச்சான்று பெற்ற இயற்கை நுண்ணுயிர் உரமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குப்பை மேலாண்மையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் இந்த முயற்சி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

45 நாட்களில் குப்பை... இயற்கை உரமாக மாற்றம்!

இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்  வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாநகராட்சியின் 51 வார்டுகளிலும் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் 4 வகைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் சமையலறை கழிவுகள், காய்கறி மற்றும் பழக்கழிவுகள், பூக்கழிவுகள், முட்டை ஓடுகள், காபித்தூள் உள்ளிட்ட இயற்கையாக மக்கக்கூடிய கழிவுகள் தனியாக சேகரிக்கப்படுகின்றன.

இந்தக் கழிவுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 நுண்ணுயிர் செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, முறையாக பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 45 நாட்களுக்குப் பிறகு அவை உரமாக மாறுகின்றன. இதன் மூலம் குப்பை குவியல் குறைவதுடன், கழிவுகள் மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்றப்படுகின்றன.

மண்ணுக்கும் செடிகளுக்கும் பல்வேறு நன்மைகள்

இந்த இயற்கை நுண்ணுயிர் உரம் வேளாண்மைத் துறையின் தரச்சான்று பெற்றதாகும். இதனை பூச்செடிகள், காய்கறித் தோட்டங்கள், தோட்டப்பயிர்கள், வாழை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு செடி, கொடிகளுக்கு பயன்படுத்தலாம்.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள கரிமச் சத்து அதிகரிக்க உதவுவதுடன், மண்ணின் கட்டமைப்பையும் மேம்படுத்த முடியும். மண்ணில் நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிப்பதால் செடிகளின் வேர் வளர்ச்சிக்கும் சாதகமான சூழல் உருவாகிறது. மேலும், நுண்ணுயிர் செயல்பாடுகள் அதிகரிப்பது மண்ணின் இயற்கை வளத்தை மேம்படுத்த உதவுகிறது.

ரசாயன உரப் பயன்பாட்டை குறைக்க உதவும்

இயற்கை உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணின் வளத்தைப் பாதுகாக்கும் நிலையான வேளாண்மை முறைக்கு உதவக்கூடியதாகும். குறிப்பாக வீட்டுத் தோட்டங்கள் மற்றும் சிறு அளவிலான காய்கறி சாகுபடியில் இத்தகைய உரங்களை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் பயிரின் தன்மை மற்றும் மண்ணின் தேவைக்கு ஏற்ப உர அளவைத் தேர்வு செய்வது அவசியம்.

இயற்கை நுண்ணுரம் 14 இடங்களில் விற்பனை

தஞ்சாவூர் மாநகராட்சியின் கரந்தை, கவாடிக்காரத்தெரு, காமராஜர் சந்தை, கீழவாசல், சரபோஜி சந்தை, அய்யங்கடை தெரு, மகர்நோன்புச்சாவடி மாநகராட்சி அலுவலகம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவாஜி நகர், முனிசிபல் காலனி, அண்ணா நகர், புதிய பேருந்து நிலையம் அம்மா பூங்கா அருகில் உள்ளிட்ட 14 கோட்டங்களிலும் இயற்கை நுண்ணுயிர் உரம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ உரம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாநகராட்சி உதவி எண் 18004251100-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையர்  வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளார்.

குப்பையை சுமையாக பார்க்காமல், அதையே வளமாக மாற்றும் இந்த முயற்சி நகரின் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மைக்கு ஒரே நேரத்தில் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.

Read Entire Article