கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடிக்க எதிர்ப்பு...கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

1 year ago 7
ARTICLE AD

விழுப்புரம்: கிறிஸ்தவ சிற்றாலயத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பருகம்பட்டு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு திடீரென அங்குள்ள நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, கிறிஸ்தவ சிற்றாலயமான வழித்துணை மாதா கெபியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை இடிக்க முற்பட்டால் எங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என்று கூறியபடி அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிற்றாலயத்தை அகற்ற எதிர்ப்பு

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “நாங்கள் எங்களுடைய சொந்த செலவில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.8½ லட்சம் மதிப்பில் கிறிஸ்தவ சிற்றாலயம் (வழித்துணை மாதா கெபி) கட்டி வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தை சேர்ந்த தனிப்பட்ட சிலர், அவர்கள் ஆதாயம் பெறும் நோக்கில், இந்த ஆலயம் நீர்நிலை பகுதியில் இருப்பதாக கூறி அதனை இடிப்பதற்கு அரசாணை பெற்றுள்ளனர். இந்த ஆலயத்தை இடித்தால் நாங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளோகுவோம், இதனால் மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவாகலாம்.

இந்த சிற்றாலயம், நீர்நிலை பகுதியில் இல்லை. ஆகவே இதனை இடிக்கும் முடிவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதையும் மீறி இடிக்க நினைத்தால் இந்த ஆலயத்தை நகர்த்தி வைக்க எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Read Entire Article