காவல் துறையில் லஞ்சமா?... புகார் அளிக்க தனி பிரிவு... உடனடி நடவடிக்கை உறுதி

2 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: காவல்துறையில் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளிக்க தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் காவலர்கள் மற்றும் காவல் துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பது உள்ளிட்ட ஊழல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் பணிகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் கேட்கப்பட்டால், பொதுமக்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் அறிவித்துள்ளது.

லஞ்சமா? உடனே தகவல் தெரிவிக்கலாம்!

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் காவல் துறையினர் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களைப் பெற்று, அவற்றை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் புகார் அளிப்பது, விசாரணை மேற்கொள்வது, சட்டப்பூர்வ பணிகளைச் செய்வது உள்ளிட்ட அரசுப் பணிகளுக்காக பொதுமக்களிடம் காவல் துறையினர் லஞ்சம் கேட்பதாக தெரியவந்தால், அதுகுறித்த தகவலை நேரடியாக இந்தப் பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

அழைப்பு மட்டுமல்ல... வாட்ஸ் அப்பிலும் புகார் அனுப்பும் வசதி

பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் தகவல்களை 98404 38678 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

லஞ்சம் கேட்கப்பட்ட சம்பவம், சம்பந்தப்பட்ட காவல் துறை ஊழியர், எந்தப் பணிக்காக லஞ்சம் கேட்கப்பட்டது என்பன உள்ளிட்ட தகவல்கள் கிடைத்தால், அவற்றை இந்த எண்ணில் தெரிவிக்கலாம். புகாரின் தன்மை மற்றும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்

லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பாக தகவல் அளிக்கும் பொதுமக்களின் மிகப்பெரிய தயக்கம், தங்களது அடையாளம் வெளியே தெரிந்துவிடுமோ என்பதுதான். இதை கருத்தில் கொண்டு, தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும். அதன் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

காவல் துறையினரின் எந்தவொரு அரசுப் பணியையும் மேற்கொள்வதற்காக லஞ்சம் கேட்கப்பட்டாலோ அல்லது காவல் துறையில் ஊழல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நம்பகமான தகவல் கிடைத்தாலோ, பொதுமக்கள் அச்சமின்றி 98404 38678 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியமானது என்பதால், புகார்களை மறைக்காமல் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, பொதுமக்களுக்கு நேர்மையான சேவையை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் துணிச்சலாக லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதனால் ஊழல் செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அச்சம் தவிர்த்து அடையாளம் காட்டினால் சட்டப்படி இரும்பு கரம் கொண்டு லஞ்சம் என்ற அரக்கன் ஒடுக்கப்படுவான்.

Read Entire Article