காலமுறை ஊதியம் வழங்கணும்... ஊர்ப்புற நூலகர்கள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்

5 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூா்: ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊர்ப்புற நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மண்டலம் சார்பில் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் தஞ்சை மண்டலம் சார்பில் (தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்) கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ப. வெங்கடேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலையரசி, டேவிட், இளவரசன், ஜோதிராஜன், சங்கீதா, வீரசெல்வன், குமரன், சுசீலா, தீபா, அன்பழகன், தனசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தில், தி.மு.க தேர்தல் அறிக்கை வரிசை எண் .178-ல் கூறியபடி ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊர்ப்புற நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும் , 10 ஆண்டுகள் பணி முடித்த ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால் சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். இந்தப் போராட்டத்தில் தஞ்சை மண்டலத்தை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்புற நூலகங்கள், கிராமப்புற மக்களுக்கு அறிவு மற்றும் கல்வியை பெறுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. அவை அறிவை வளர்ப்பதற்கும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவுகின்றன. நூலகங்கள் புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள் மற்றும் பிற கல்வி சார்ந்த ஆதாரங்களை வழங்குகின்றன. இதன் மூலம், கிராமப்புற மக்கள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ளவும், கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும்.

நூலகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கின்றன. இது தனிநபர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும், மொழித் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு மற்றும் தகவல்களைப் பெறுவதற்கும் உதவுகிறது. நூலகங்கள் சமூக மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய கருவியாக செயல்படுகின்றன. அவை, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவையும் கல்வியையும் வழங்குவதன் மூலம், தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நூலகங்கள் தகவல் மையங்களாகச் செயல்படுகின்றன. அவை பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. மேலும், ஆன்லைன் தரவுத்தளங்கள் மற்றும் மின் நூலகங்கள் மூலம், கிராமப்புற மக்கள் உலகளாவிய தகவல்களையும் அணுக முடியும். ஊர்புற நூலகங்கள் இலவசமாக வாசிக்க மற்றும் புத்தகங்களை கடன் வாங்க ஒரு இடத்தை வழங்குகின்றன.

இதனால், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதி இல்லாதவர்களுக்கும் கல்வி மற்றும் வாசிப்பு வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக ஊர்ப்புற நூலகங்கள் செயல்படுகின்றன. நூலகங்கள் கிராமப்புற சமூகங்களுக்கு ஒரு சமூக மையமாக செயல்படுகின்றன. வாசிப்பு நிகழ்வுகள், புத்தக விவாதங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் மூலம், மக்கள் ஒன்றுகூடி தொடர்பு கொள்ளவும், சமூக உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இந்த நூலகங்களில் திறம்பட பணியாற்றும் நூலகர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

Read Entire Article