ஐ.ஏ.எஸ்., நீதிமன்றத்தை விட மேலானவரா? நேரில் வாங்க! அதிகாரியை அலறவிட்ட ஜட்ஜ்!

5 months ago 4
ARTICLE AD

அரசு அதிகாரிகளின் பணி என்பது, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகள் விதிகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. விதிகள் மீறி யாராவது செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டியதும், அரசு அதிகாரிகளின் முக்கிய பணியாக இருந்து வருகிறது. உயர் அதிகாரிகள் சிலர் விதிமுறைகளில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு முறையான தண்டனைகள் கிடைப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த குற்றச்சாட்டுக்கு, சென்னை கமிஷனருக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பிரச்சனை என்ன ?

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில், அங்கீகரிக்கப்படாத, சட்ட விரோதமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன், என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராயபுரம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

இதுகுறித்து வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது மற்றும் பிற மண்டலங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு முன்வைத்து, ருக்மாங்கதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், விவரங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. வேண்டுமென்றே சென்னை கமிஷனர் விபரங்களை அளிக்கவில்லை என நீதிபதி விமர்சித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்,"மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்கள் முழுமையாக இல்லை. பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என தெரிவித்தார்".

நீதிபதி சரமாரி கேள்வி

இதைக் கேட்ட நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்காக சென்னை மாநகராட்சி கமிஷனரை கண்டித்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த தொகையை கமிஷனரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, அதை புற்றுநோய் மையத்துக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவரா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க மீண்டும் சென்னை மாநகராட்சி கமிஷனர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம்: ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவரா?. நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டலாமா? சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்

Read Entire Article