என்னது தனியார் மயமாகிறதா? திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம்

9 months ago 6
ARTICLE AD

தஞ்சாவூர்: செம டெவலெப்மெண்ட் ஆகி உயர்ந்து கொண்டே இருக்கும் திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறதா மத்திய அரசு என்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனியார் வசமாகிறதா திருச்சி விமான நிலையம்? இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக எழுதி உள்ள கடிதம் தொடர்பாக செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறிய விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தை திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு நகரங்களை சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தஞ்சாவூர், அரியலூ!ர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருச்சி விமான நிலையத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே புதிய முனையம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் விமான நிலையங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில் அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, ராஜமுந்திரி உள்பட 25 விமான நிலையங்கள் 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?  திருச்சி அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகள் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி விமான நிலையம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இது போன்று தனியாரிடம் ஒப்படைப்பது நல்லது என்று ஒரு தரப்பினரும், தனியார் வசமாக கூடாது என்று ஒரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் அதிகளவு பயணிகள் பயன்பாட்டை பெற்று உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தனியார் வசமானால் பல்வேறு விதத்திலும் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் திருச்சி விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. நகர மையத்திற்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் உள்ள இடம், விமான நிலையத்தை குறிப்பிடத்தக்கதாக மாற்றி உள்ளது. திருச்சி விமான நிலையம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் முக்கிய மையங்களில் ஒன்றாக இது பயன்படுத்தப்பட்டது. விமான நிலையம் முக்கியமாக இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாக செயல்பட்டது. பின்னர் வணிக விமான நிலையமாக மாற்றப்பட்டது. வணிக விமானங்கள் 1941 இல் தொடங்கியது.

விமான நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சேவை செய்கிறது. 2011 வரை திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சுங்க மையமாக செயல்பட்டது. மற்ற நாடுகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் விமான நிலையமே முக்கிய இடத்தை வகித்தது. பின்னர் 2012 இல், விமான நிலையம் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து சர்வதேச அந்தஸ்தைப் பெற்றது.

பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 2022ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 31வது பரபரப்பான விமான நிலையமாக மாறி உள்ளது. வெளிநாட்டு விமானங்களின் இயக்கத்தைப் பொறுத்தவரை, இந்திய விமான நிலையங்களில் இது 11வது இடத்தில் உள்ளது. மொத்த பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இது சென்னை மற்றும் கோயம்புத்தூரை பின்தள்ளி, தமிழ்நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article