“இன்னும் 30 ஆண்டுகள் எதும் செய்ய முடியாது” ..சிஎம் விஜய் குறித்து அமைச்சர் சொன்னது என்ன?

3 months ago 6
ARTICLE AD

“எங்கள் வீதியில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது என எழுதுகிற காலம் வரவேண்டும். காமராஜர், கக்கன் ஆட்சி போன்று தமிழகம் புதிய பரிமாணம் பெற வேண்டும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இன்னும் 30 ஆண்டுகள் எதும் செய்ய முடியாது

பின்னர் பேசிய அமைச்சர், “என்ன செய்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர் என தமிழகத்தின் பார்வை நம்மீது  பட்டுள்ளது, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர், கையெழுத்து இயக்கத்திற்கு எழுச்சி கிடைத்துள்ளது. தவெக அரசு அமைந்தவுடன், மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. நல்லாட்சி நடத்துவார்கள் என நம்பிக்கை வந்துள்ளது. இன்னும் 30 ஆண்டுகள் எதும் செய்ய முடியாது. நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கிவிடும் தைரியம் நமக்கு மட்டும் தான் உள்ளது.

கடந்த 60 வருடங்களாக லஞ்சம் கொடு, லஞ்சம் வாங்கு, வருமானத்தை ஈட்டு, இனி வாங்குவதற்கு தமிழ்நாட்டில் எதும் கிடையாது. இந்த கையெழுத்து இயக்கம் என்பது விளையாட்டிற்காகவோ, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, ஒருநாள் கூத்துகிற்காகவோ இல்லை, இது நமது பாரம்பரியம், காமராஜர் காலத்தில் இருந்து, தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிற நடைமுறையாகும். அதற்கு தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தவுடன், தவெக தலைவர் விஜய் யாருக்கும் லஞ்சம் கொடுக்க கூடாது என ஆணித்தரமான நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளார். எந்த நிலையிலும் ஊழல் இருக்கக் கூடாது என்று தான், தமிழக முதல்வர் கடுமையான  தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.  அந்த தீர்மானத்திற்கு வலுசேர்த்து இருக்கிறது காங்கிரஸ் பேரியக்கம்.

லஞ்சம் வாங்காத அரசாங்கம்

இனி உயர்கல்வித்துறையில் ஊழலோ, லஞ்சலோ அறவே நடக்காது என கூறியுள்ளேன். எல்லா நிலையிலும் ஊழல் செய்துள்ளார்கள். அமைச்சராகி 60 நாட்கள் ஆகியுள்ளது. இந்த 60 நாளில், நான் பார்த்தது எல்லாவற்றிலும் ஊழல், ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இளைஞர்கள், பல்வேறு தரப்பினர், அரசியல் தெரியதவர்களும், நம்மை நம்பி வாக்களித்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள் இது லஞ்சம் வாங்காத அரசாங்கம் என்று, மக்களே தீர்ப்பளித்து சொல்கிறார்கள்.

முதல்வர் விஜய் கூறியிருக்கிறார், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால், மிக கடுமையான நடவடிக்கை பாயும் என தெளிவாக கூறியிருக்கிறார். அதையெல்லாம் மனதில் வைத்துதான், தமிழ்நாடு ஒரு புதிய தமிழகமாக மாறுகிறது. காமராஜர், கக்கனை போல தமிழ்நாடு ஒரு புதிய பரிமாணத்தில் வரவேண்டும் என்றால், லஞ்சம் தவிர்க்கபட வேண்டும், நம் நெஞ்சமெல்லாம் நிமிர வேண்டும் இந்த கையெழுத்து இயக்கம், ஒவ்வொரு வீடுகளிலும் எழுத வேண்டும். எங்கள் வீதியில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில், லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது, என எழுதுகிற காலம் வரவேண்டும்” என பேசினார்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன், திருப்பத்தூர்  நகர காங்கிரஸ் தலைவர் பரத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Read Entire Article