இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. மக்களை கவரும் காதல் டிராமா.. ஒரே ரொமான்ஸ் தான் போங்க

5 months ago 5
ARTICLE AD

வாரம் வாரம் திரையரங்குகளில் புதிய புதிய படங்கள் வெளியாவது போன்று ஓடிடி தளங்களிலும் புதிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மொழி தாண்டி சில படங்கள் மக்களின் வரவேற்பை பெற்று நல்ல விமர்சனங்களையும் பெறுகிறது. ஓடிடி தளங்கள் மூலம் மாற்று மொழி படங்களை பார்க்கும் ஆர்வமும் திரை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியான படங்களின் விவரத்தை இதில் காணலாம்.

நரிவேட்டை

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நரிவேட்டை. இப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் என்ற திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான சேரன் இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

கலியுகம்

பொல்லாதவன் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றவர் கிஷோர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள கலியுகம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீனாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.

Mr & Mrs Bachelor

மலையாள திரையுலகின் சென்ஷேன் ஹீரோயினான அனஸ்வர ராஜன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ள திரைப்படம் Mr & Mrs Bachelor. பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போடுகிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் அப்பாவிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். அதேபோன்று நண்பனின் காதலி என்று பொய் சொல்லும் அனஸ்வர ராஜன் எதிர்பாராத விதமாக இவர் இந்திரஜித் சுகுமாரனை சந்திக்கிறார்.  காமெடி கலந்த ரொமாண்டிக் படமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படம் நாளை லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

8 வசந்தலு

நடிகை அனந்திகா சனில்குமார் , ரவி டுக்கிர்லா மற்றும் ஹனு ரெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 8 Vasantalu. இப்படம் கடந்த மாதம் வெளியானது. ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவான இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் தனது நடிப்பால் அனந்திகா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தை பனின்ற நர்செட்டி இயக்கியுள்ளார்.  8 வசந்தலு திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மூன்வாக்

கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆசைப்படும் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம் மூன்வாக். இப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வினோத் .கே இயக்கியுள்ளார். மூன்வாக் திரைப்படத்தில் அருநாத், சிபி குட்டப்பன் மற்றும் சுஜித் பிரபஞ்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை இப்படம் வெளியாகிறது.

Read Entire Article