விழுப்புரம் : அதிமுகவில் பெண்களை கேவலப்படுத்தி இழிவுபடுத்தி சமூகவலைதளத்தில் பரப்புகின்ற நபர்களை ஊக்குவிக்கின்ற வகையில் செயல்படும் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு இது அழகா இதுதான் கட்சி நடத்துகிற விதமா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறிவிட்டது தமிழகத்தில் காவல் துறைமாறவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் குறித்து அவதூறாகவும் அதிமுக பெண் நிர்வாகிகள் குறித்து மானபங்கம்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடும் பசுபதி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். ஏற்கனவே சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ் பி மதிவாணனிடம் வலியுறுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் சமீப காலமாக பெண்களை குறிவைத்து விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதியின் ஆதரவாளர்கள் அரசியல் காழ்புணர்சி காரணமாக மானபங்கபடுத்தி பொய்யான அவதூறான செய்திகள் பெண்களை அச்சுறுத்தும் வகையில் ஏ ஐ புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக குற்றச்சாட்டி அவர் இதனால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுபடுத்துவதாகவும், அதிமுக சார்பில் நாட்டார்மங்கலத்தில் நடைபெற்ற ஒன்றிய கூட்டத்தில் பெண்களை மானங்கபடுத்தி சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

அரசியிலில் சண்டைகள் இருந்தாலும் இதுவரை எந்த கட்சியும் குடும்ப பெண்களை தரம்தாழ்ந்து பேசி செயல்பட்டதில்லை ஆனால் அதிமுகவில் நடப்பதாகவும் புரட்சி தலைவரால் கட்டி காப்பாற்றப்பட்ட அதிமுக இயக்கத்தில் லட்சகணக்கான பெண்கள் வந்த இயக்கத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்காலம் ஆனால் அதிமுகவில் உழைத்து கொண்டிருக்கிற பெண்களை கேவலப்படுத்தி சமூகவலைதளத்தில் பரப்புகின்ற நபர்களை ஊக்குவிக்கின்ற தலைமைக்கு அழகா இருக்கிறதா உங்கள் தலைமைக்கு அழகா எடப்பாடி பழனிச்சாமி என கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இது தான் நீங்கள் கட்சி நடத்தும் விதமாக என கூறினார்.

பெண்கள் குறித்து அவதூறாக மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை இல்லை என்றும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பி தமிழக மக்கள் முதலமைச்சரை தேர்வுசெய்துள்ளனர். பெண்களுக்கான பாதுகாப்பினை உருவாக்க சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டது இருப்பினும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.

ஆட்சி மாறி விட்டது காட்சி மாறிவிட்டது காவல் துறை மாறவில்லை, தன்னை பற்றி அவதூறாக பேசினார்கள் பரவாயில்லை ஆனால் பெண்களை தரம்தாழ்ந்தி பேசுகிறார்கள் காவல் துறை தனக்கு சொல்லப்பட்ட பதிலில் தேவை பட்டால் சார்ஜ் சீட் போடுவோம் என்கிறார்கள் குற்றவாளிகள் பெண்களை அவதூறாக பேசுபவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கூறினால் கைது செய்யமாட்டோம் தேவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்கிறார். இந்த பதிலை எஸ் பியிடம் எதிர்பார்க்கவில்லை, முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தலை முதல்வர் வழங்க வேண்டும் என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.