ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?

3 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் சேதமடைந்த கால்நடை தடுப்பால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த கேட்டில் காட் மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை நுழைவு தடுப்புப் பாதை (Cattle Guard) பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் கடும் சிரமத்தையும் உயிர் அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்திற்குள் வெளியில் இருந்து கால்நடைகள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள இந்த கால்நடை தடுப்பு அமைப்பு, நீண்ட காலமாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்துள்ளது. இரும்புக் குழாய்களுக்கு இடையே பெரிய இடைவெளிகள் உருவாகியுள்ளதுடன், அவை துருப்பிடித்து பலவீனமடைந்துள்ளன. மேலும், தடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரைப்பகுதியும் உடைந்து குழிகள் மற்றும் விரிசல்களுடன் காணப்படுவதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமக்களின் முதல் மருத்துவ மையமாக விளங்குகின்றன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தினசரி இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆனால், மருத்துவமனை நுழைவாயிலிலேயே ஆபத்தான சூழல் நிலவுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அழகியநாயகிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வாரந்தோறும் பிஸியோதெரபி சிகிச்சைக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கிறார். நுழைவாயிலில் சேதமடைந்துள்ள கால்நடை தடுப்புப் பகுதியைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

சமீபத்தில் சிகிச்சை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பியபோது, ஆட்டோவின் சக்கரம் கால்நடை தடுப்பில் ஏற்பட்டிருந்த பெரிய இடைவெளியில் சிக்கிக் கொண்டதாகவும், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகே ஆட்டோவை வெளியே எடுக்க முடிந்ததாகவும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளியான தமக்கு இதுபோன்ற சம்பவங்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை மட்டுமல்ல. தினமும் மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வரும் பெற்றோர்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வருபவர்களுக்கும் இந்த சேதமடைந்த நுழைவாயில் பெரும் சவாலாக உள்ளது. கவனக்குறைவாக பயணித்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனை போன்ற மக்கள் நல சேவை வழங்கும் இடத்தில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளே இல்லாத நிலை அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை நீடித்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, மருத்துவமனை நுழைவாயிலில் சேதமடைந்துள்ள துருப்பிடித்த இரும்புக் குழாய்களை உடனடியாக அகற்றி, பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப புதிய கால்நடை தடுப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், உடைந்த சிமெண்ட் தரைப்பகுதியை புதுப்பித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக மருத்துவமனைக்குள் செல்லும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்தப் பிரச்சினையில் அதிகாரிகள் காலதாமதம் இன்றி ஆய்வு மேற்கொண்டு உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read Entire Article