அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

1 year ago 7
ARTICLE AD

நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

''தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் இருக்கிறது. இங்கு விழா நடப்பது சரியானது. நாமக்கல்லில் கலைஞர் சிலை திறந்திருப்பது பொருத்தமானது. புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல்லில்தான் அதிக அளவிலான மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் 2ஆவது மாநிலமாக நாமக்கல் உள்ளது.

நாமக்கல்லை மாவட்டமாக உயர்த்தியவர் கருணாநிதி. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது திமுக அரசு.

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.10 கோடி ஒதுக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Read Entire Article