Vinesh Phogat Arrival: இந்தியா வந்ததும் வினேஷ் போகத் சொன்ன அந்த வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

1 year ago 7
ARTICLE AD

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத் ஆனால் இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று வினேஷ் போகத் 100 கிராம் கூடுதலாக இருந்ததன் காரணமாக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இருந்ததால், வினேஷ் போகத் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டது இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர், விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்றும் வினேஷ் போகத்திற்கு பதக்கம் மறுக்கப்பட்டது. இதையடுத்து, பாரிஸில் இருந்து இன்று காலை வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.

நாட்டு மக்களுக்கு நன்றி:

அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர், இதனால் மனம் நெகிழ்ந்த வினேஷ் போகத், ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார். இந்த தருணத்தில் சக மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,"நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி"என்று கூறியுள்ளார். இது அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: Jay Shah:"நான் தான் காரணம்" ஆனாலும் ஜெய்ஷா ரொம்ப ஸ்டிரிக்ட்!

மேலும் படிக்க: Punjab Kings: பஞ்சாப் கிங்ஸின் பங்கு யாருக்கு? ப்ரீத்திக்கு குட் நியூஸ் வருமா?

Read Entire Article