விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே காதல் கணவர் பேசாதாதல் 7 மாத பெண் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தம்பதி:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் ஆலஞ்சாலை வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது 25; இவர் புதுச்சேரி செல்லிப்பட்டில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவர் விக்கிவாண்டி அருகே உள்ள எடையப்பட்டியை சேர்ந்த கனிமொழி வயது 22; என்பவரை காதலித்து, கடந்த 2023 மார்ச் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு

இவர்களுக்கு சச்சிகா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் சென்ற கனிமொழிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்துவர கணவர் ஜெயபிரகாஷ் செல்லவில்லை. அவரது பெற்றோர் மட்டும் சென்று அழைத்து வந்துள்ளனர்.

பேசாமல் இருந்த கணவர்:

வீட்டிற்கு வந்த பின்னரும் கணவர் தன்னிடம் சரிவர பேசாமல் இருந்துவந்ததால், மனமுடைந்த கனிமொழி நேற்று முன்தினம் காலை வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் கனிமொழி தற்கொலை செய்து கொண்டதால், விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)