Top 10 News: ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்! மீண்டும் வேலையை காட்டிய டிரம்ப்- டாப்10 செய்திகள்

4 months ago 12
ARTICLE AD

மீண்டும் ஜனநாயகனுக்கு சிக்கல்

ஜனநாயகன் திரைப்பட தணிக்கைச் சான்று வழக்கு மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம். படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.உரிய விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு அவகாசம் வழங்கவில்லை ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவெகவில் பாமக

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை என தகவல்.திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்; அதிமுக கூட்டணியிலும் ராமதாஸ் தரப்பை சேர்க்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை என தகவல்; ஓரிரு நாட்களில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

வரி உயர்வு

தென்கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15% இருந்து 25% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென்கொரியா தாமதப்படுத்துவதாக டிரம்ப் குற்றச்சாட்டு; இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்திவருவதால் அதிருப்தியில் உள்ளனர்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடுமுழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று(ஜன.27) வேலைநிறுத்த போராட்டம்
வாரந்தோறும் 2, 4வது சனிக்கிழமை மட்டுமே விடுமுறை உள்ள நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் வலியுறுத்தல்; வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கக் கோரிக்கை; வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இன்று வங்கி சேவை பாதிக்கப்பட வாய்ப்பு

கட்டாயக் கூட்டணி

“பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி" ழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னை காப்பதற்காகவும் பதவியை தக்க வைக்கவும் எடப்பாடி பழனிசாமி அமைத்த சுய நலக்கூட்டணி  தஞ்சையில் நடைபெற்ற மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வார்னிங் கொடுத்த ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் மற்றும் Mac பயனர்கள் குரோம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை. Unsupported குரோம் வெர்ஷன்களால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களை ஆப்பிள் சுட்டிக்காட்டியுள்ளது. கூகுள் நிறுவனமும் குரோமை பயன்படுக்காதீர்கள் என ஆப்பிள் பயனர்களை எச்சரித்துள்ளார்

யுரேனிய ஒப்பந்தம்?

கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். சுமார் ரூ.17,500 கோடி மதிப்பில் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு.இந்தியாவுடன் அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளிலும், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு .2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ரணபலி

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தன உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது.வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் வீராங்கனை

WPL-ல் சதமடித்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மும்பை வீராங்கனை நாட் ஸ்கைவர்-பிரண்ட். RCB-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Read Entire Article