Top 10 News: செபி தலைவருக்கு சிக்கல், ரூ.1.50 கோடிக்கு விற்பனையான உணவு - டாப் 10 செய்திகள்

11 months ago 7
ARTICLE AD

கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வழிபாட்டில் பங்கேற்ற மக்கள் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அண்ணா பல்கலை., பாலியல் அத்துமீறல்?

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்றிரவு, 2ம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக புகார் - கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை. மாணவியை தாக்கியவர்கள் பல்கலை. மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்ற நோக்கில் விசாரணை.

மெரினா உணவுத் திருவிழாவில் ரூ.1.50 கோடிக்கு விற்பனையான உணவு

சென்னை மெரினாவில் கடந்த 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினரின் ரூ.1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள், உணவுகளை வாங்கிச் சென்றுள்ளனர். 45 அரங்குகளில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள், ஆயத்த உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன

செபி தலைவருக்கு செக் வைத்த லோக்பால் அமைப்பு

செபி தலைவர் மாதபி புரிபுச்சிடம் வரும் ஜனவரி 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது லோக்பால் அமைப்பு. இவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா ஊழல் குற்றம் சாட்டியிருந்த நிலையில், விசாரணைக்கு அவரும் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு நினைவு திரும்பியது

'புஷ்பா 2' பட ப்ரீமியர் காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுனின் வருகையின் போது, நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில், கோமா நிலைக்குச் சென்ற 12 வயது சிறுவனுக்கு, 20 நாட்கள் கழித்து நினைவு திரும்பியது. சிறுவனின் தாயார் ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்க, இவ்விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி, பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

பாரீஸ் Eiffel Tower-ல் லேசான தீ விபத்து

பாரிஸில் உள்ள பிரபல சுற்றுலா தலமான Eiffel Tower-ல் திடீரென ஏற்பட்ட தீவிபத்து. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அங்கு கூடியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மின்கம்பிகள் சூடேறியதால் தீப்பற்றியதாக கூறப்படுகிறது

கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படைப்பு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், ஹோமரின் 'THE Odyssey' என்ற காவியக் கதையைத் தழுவி திரைப்படமாக எடுக்கவுள்ளார். இப்படத்தில் மேட் டேமன்,  டாம் ஹோலாண்ட், ஸெண்டாயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் 2026ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் இருந்து வாழ்த்து

சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர். பூமியில் இருப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். ஒரு சில நாட்கள் என திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் பயணம், 6 மாதங்களை கடந்து நீளவது குறிப்பிடத்தக்கது.

நாள தொடங்குகிறது பாக்ஸிங் டே டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸிற்கு மறுநாள் தொடங்கும் இப்போட்டி, பாக்ஸிங் டே டெஸ்ட் என குறிப்பிடப்படுகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில், இந்த தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

விளக்கமளித்த மனு பாக்கர்

”ஒரு வீராங்கனையாக நாட்டுக்காக விளையாடுவது  மட்டுமே எனது பங்கு. விருதுகளும், மரியாதைகளும் ஊக்கமளித்தாலும் அவை எனது நோக்கம் இல்லை.  விருதுக்கு விண்ணப்பிக்கும்போது தவறு நடந்திருக்கலாம் என நினைக்கிறேன். விருதுகளைவிட நாட்டுக்காக பதக்கங்கள் வெல்வதே எனக்கு உத்வேகம் அளிக் கிறது” - கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம்பெறாதது பேசுபொருளானதை தொடர்ந்து, அவர் விளக்கம் அளித்துள்ளார்

Read Entire Article