Top 10 News Headlines: ஸ்டாலின் ஆதரவு, மிரட்டும் தங்கம், கருப்பு பெட்டி மீட்பு, ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

2 months ago 8
ARTICLE AD

யுஜிசிக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

“UGC விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தாமதமான நடவடிக்கை என்றாலும் பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வு. யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது” - முதலமைச்சர் ஸ்டாலின்

உச்சானிக் கொம்பில் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 கூடி ரூ.1,34,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800க்கு விற்பனை  செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.14,720 கூடியுள்ளது.

ஒபிஎஸ் யார் பக்கம்?

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்று பெரியகுளத்தில் ஆலோசனை. தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்பு

அஜித் பவார் இறுதி சடங்கு

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. பாரமதியில் நடைபெறும் நிகழ்வின் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் விபத்து எப்படி?

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்திற்கு பவர் பேங்க் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை. தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட Power Bankக்கள் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்டதால், அதில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இந்த இருக்கலாம் என அதிகாரிகள் தகவல்.

தெருநாய்கள் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிருப்தி

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவை பல்வேறு மாநிலங்கள் சரியாக பின்பற்றவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு காட்டம்.
தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் கதை சொல்லி | வருகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர யாரும் இது குறித்த தகவல்களை சமர்பிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவிப்பு. இன்றும் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

ஈரானுக்கு இறுதி கெடு விதித்த ட்ரம்ப்

அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுக்கு விதித்த கெடு முடியப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை. ஈரானை நோக்கி ஏராளமான போர் கப்பல்கள் விரைந்து கொண்டிருப்பதாக மிரட்டல்

16,000 பணிகள் காலி

உலகம் முழுவதும் மேலும் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு. மனிதர்கள் செய்யும் பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் செய்து முடிக்க திட்டம்

கேமர்கள் ஷாக்

கேமிங் உலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான PlayStation 6, 2027ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2029 அல்லது அதற்குப் பிறகே அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய PS5 மாடலின் விற்பனை இன்னும் வலுவாக இருப்பதாலும், Al வளர்ச்சியால் Sony நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள RAM சிப்களின் தட்டுப்பாடும் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்

“நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வேண்டுமென்றேதான் 6 பேட்டர்களுடன் நாங்கள் விளையாடினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்!"

Read Entire Article