Top 10 News Headlines: மகளிர் உரிமைத்தொகை, பாஜக மீது அதிமுக அட்டாக், கட்சி தொடங்கிய மஸ்க் - 11 மணி செய்திகள்

5 months ago 4
ARTICLE AD

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட உள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டம்; 3 மாதங்களுக்கு நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் எனத் தகவல்

பாஜக உடன் தற்காலிக கூட்டணி

“பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான்”
என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜகவின் எண்ணம்; அது ஒருக்காலும் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் கூட்டணி ஆட்சி தொடர்பான குழப்பமான கருத்துகள் நிலவும் சூழலில் அன்வர் ராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அன்புமணி நீக்கம்

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு. புதிதாக 21 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைப்பு. ஜி.கே.மணி, அருள், ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு குழுவில் இடம்.

பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 07) தொடங்குகிறது. AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி. 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதியும் கலந்தாய்வு.

பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,  4 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் பெயர் நீக்கம் - புதிய வசதி

இறந்தவர்களின் பெயரை ஆதாரில் இருந்து நீக்க குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம். மோசடிகளை தடுக்க புதிய வசதி அறிமுகம். இறப்புச் சான்றிதழை முதன்மை ஆதாரமாகக் கொண்டு குடும்பத்தினரே பெயர் நீக்க முடியும். வாரிசு சான்று, சொத்துப் பதிவு ஆகியவற்றுக்கு ஆதார் நீக்கச் சான்று கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடி:

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, அர்ஜெண்டினாவிலிருந்து புறப்பட்டு பிரேசில் சென்றடைந்தார். அங்கு நடைபெற உள்ள 17வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அடுத்ததாக அங்கிருந்து நமீபியா நாட்டிற்கு பிரதமர் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி தொடங்கிய எலான் மஸ்க்

‘தி அமெரிக்க பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியதாக எலான் மஸ்க் அறிவிப்பு. அமெரிக்கர்களின் சுதந்திரத்தை திரும்ப வழங்குவதே நோக்கம் என சூளுரை. வரி விவகாரத்தில் ட்ரம்ப் உடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக புதிய கட்சி தொடங்குவேன் என மஸ்க் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான கட்டத்தில் எட்க்பாஸ்டன் டெஸ்ட்

2வது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 72/3 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டமான இன்று மீதம் உள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற இந்தியா தீவிரம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

கில்லுக்கு வாழ்த்து சொன்ன கோலி

“அருமை Star Boy. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்” எட்க்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து

Read Entire Article