Top 10 News Headlines: பாஜகவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. குறைந்த தங்கம் விலை.. 11 மணி செய்திகள் இதோ!

2 months ago 10
ARTICLE AD

பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் ஊழல் வாதிகள்தான். கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இப்போது உங்கள் Washing Machineல் அவர்களை எல்லாம் வெளுத்துட்டீர்களா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் சட்டமன்றம் செல்வேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.9, 520 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னையில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்று பூஜை செய்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக, பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாட்டில் எத்தனையோ தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு காரணம் தொழிற்சங்கங்கள் தான் என உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் உரிமை பாதுகாக்கும் அதே நேரத்தில் நிர்வாக செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய கபடி வீரரும், ஒலிம்பிக் வீராங்கனை பி.டி.உஷாவின் கணவருமான சீனிவாசன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கணவர்கள் மற்றும் அடிமைகளை கையாளும் முதலாளிகள் பெண்களை காயங்கள் ஏற்படுத்தாமல் தண்டிக்க தாலிபன் அரசு அனுமதி வழங்கி உள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் கட்டாயம் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article