ஓரிரு தினங்களில் தொகுதிப்பங்கீட்டுக் குழுவை அமைக்கிறது திமுக

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொகுதிப்பங்கீட்டு குழுவை ஓரிரு நாட்களில் அமைக்கிறது திமுக. இந்த மாத இறுதிக்குள் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்து பரப்புரையை தொடங்க கூட்டணிக் கட்சிகள் திட்டம். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்பட வாய்ப்பு

தவெக மூன்றாமாண்டு கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூன்றாமாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு

சரிந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 13 ஆயிரத்து 950-க்கு விற்பனை

பெண்ணாறு நடுவர் மன்றம் - இன்று தீர்ப்பு

பெண்ணாறு நடுவர் மன்றம் அமைக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் இன்று(பிப்.2) தீர்ப்பு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது; பெண்ணாறு நீர் பங்கீடு குறித்து நடுவர்மன்றம் அமைக்கக் கோரி கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

ரீல்ஸ் மோகத்ஹ்டால் விபரீதம்

உ.பி.: இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழப்பு.

இந்திய ரசிகர்கள் ஹாப்பி

உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற அனிமே தொடர்களில் ஒன்றான Attack on Titan-ன் அனைத்து சீசன்களையும் 'Muse Asia' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ Youtube சேனலில் வெளியிட்டது.
ஜப்பானிய ஆடியோ, ஆங்கில Subtitle உடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இத்தொடரை இப்போது அனைவரும் இலவசமாக பார்க்கலாம்.

ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு மரணம்!

பாம்புக்கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாகவும், இது கவனிக்கப்படாமல் விடப்பட்ட ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடி என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1.38 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக Strike Out Snakebite அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு ஈரான் வார்னிங்

ட்ரம்ப் ஈரானை தாக்கினால் அது ஒரு பிராந்திய போராக மாறும் என்றும், தாக்குதல் நடத்துவோர் மீது மிகப்பெரிய பதிலடி கொடுப்போம் என்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாக கூறி அமெரிக்கா மிரட்டல் விடுத்து வரும் நிலையில், 'எங்களைச் சீண்டினால் ஈரானிய தே மிகக் கடுமையான பதிலடியைத் தரும்' என காமேனி ஆவேசம்

கிராமி விருது வென்ற தலாய்லாமா

உலகின் மிக உயரிய இசை விருதான Grammy விருதை, தனது 90வது வயதில் வென்று அசத்திய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா. 'Audio Book, Narration, and Storytelling Recording' பிரிவில், அவரது Meditations என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம்

“ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது விளையாட்டின் | நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாக். அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" -ஐசிசி எச்சரிக்கை