குடியரசு தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏற்றிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு நடனமாடிய மாணவிகள்

குடியரசு தினத்தை ஒட்டி மாவட்டம்தோறும் ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்

அமித் ஷாவுடைய முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான்.." - சென்னை திருவற்றியூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

"ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார்.." தவெக தலைவர் விஜயை தாக்கி அமைச்சர் நேரு பேச்சு

தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், பனையூர் கட்சி அலுவலகத்தில் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் - அன்புமணி

SIR பணிகளுக்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் இதுவரை 15.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. SIR-ல் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

மலைப் பகுதிகளில் நேற்று முதல் அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறை தடை விதிப்பு

திமுகவின் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' டெல்டா மண்டல மகளிர் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. செங்கிப்பட்டி அருகே நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.