TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்

2 months ago 4
ARTICLE AD

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்புகள்

தமிழக சட்டமன்றத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் செங்கோட்டையன் தனது துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு தேவையான நில எடுப்பு நடைமுறைகள் எளிதாக்கப்படும்! தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன்கீழ், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், நிருவாக அனுமதி பெறுதல்,முதல்நிலை மற்றும் இறுதிநிலை அறிவிப்புகள் வெளியிடுதல்,

நில மதிப்பு நிர்ணயம் செய்தல்,தீர்வாணை பிறப்பித்தல்,நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குதல், கேட்புத் துறையினருக்கு நிலம் ஒப்படைத்தல், உள்ளிட்ட நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்களுக்கு விரைந்து வழங்க 3 அலுவலர் படிநிலைகளில் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்.

ரூ. 1.02 கோடியில்பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.

ரூ.68.63 கோடி மதிப்பீட்டில் வருவாய்த் துறையின் சேவைகளை பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிட, 12,466 கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் 1253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்படும்.

நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்! தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961, பிரிவு 37A மற்றும் 37B-ன் கீழ் அரசின் அனுமதி வழங்குவதற்கான தற்போது நடைமுறையிலுள்ள நெறிமுறைகளை எளிமைப்பபடுத்திட உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வீட்டுமனைப் பட்டா சிறப்புத்திட்டத்தின் கீழ் கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகட்டி வசித்துவரும் தகுதிவாய்ந்த 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அலுவலர்களை பாதுகாக்க சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் கடமையின்போது தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுத்து, அவர்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கச் சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.

கிராம நிருவாக அலுவலர் அலுவலக பராமரிப்பு நிதி(ரூ.12,000/- ஆண்டுதோறும்) கிராம நிருவாக அலுவலர் அலுவலக பராமரிப்பிற்காக ஒரு கிராம நிருவாக அலுவலருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 1,000/- வீதம் ஆண்டொன்றிற்கு ரூ. 12,000/- வழங்கப்படும்.

136.68 கோடியில் வகையீட்டு பூகோள நிலைக்கலன் (DGPS Rovers) கருவிகள் வழங்கிடும் திட்டடநில அளவை சேவைகளைப் பொதுமக்களுக்கு விரைந்து வழங்கும் பொருட்டு, களப்பணியாளர்களுக்கு வகையீட்டு பூகோள நிலைக்கலன் (DGPS Rovers) கருவிகள் வழங்கப்படும்.

ரூ.2.25 கோடியில் நில நிருவாக ஆணையரகத்தில் இணையவழி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கான நில மாற்றம், நில உரிமை மாற்றம் மற்றும் ஏழை மக்களுக்கான வீட்டுமனைப் பட்டா போன்றவற்றை விரைந்து வழங்கும் வகையில் நில நிருவாக ஆணையரகத்தில் இணையவழி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

ரூ. 25 கோடியில் பல்நோக்கு மற்றும் புயல் பாதுகாப்பு மையங்கள் மேம்படுத்தப்படும்! பேரிடர் காலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்குமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்கள் மேம்படுத்தப்படும்.

ரூ.1.75 கோடியில் நில நிர்வாக முடிவுகளை விரைந்து மேற்கொள்ள புதிய அமைப்பு! நிலம் தொடர்பான கருத்துருக்கள் மீது விரைந்து முடிவெடுக்கும் வகையில், நில நிருவாக ஆணையரகத்தில் முடிவெடுப்பு ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும்.

ரூ.3.90 கோடியில் வெள்ள அபாயம் அதிகமுள்ள கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களுக்கான வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

ரூ.50 கோடியில் நிலச்சரிவு அபாயத்தைத் தடுக்க சிறப்புத் திட்டம்! தமிழ்நாட்டில் நிலச்சரிவு அபாய மதிப்பீடு, தணிப்பு நடவடிக்கைகள், நிலச்சரிவுகளை கண்காணித்தல் மற்றும் நிலச்சரிவு அபாயக் குறைப்பிற்கான திட்டம் செயல்படுத்தப்படும்.

16.53 கோடியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த தானியக்க உதவி அழைப்பு, எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு தொழில்நுட்ப அமைப்பு (TITAN)! பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த தானியக்க உதவி அழைப்பு எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு தொழில்நுட்ப அமைப்பு செயல்படுத்தப்படும்.

ரூ.80 கோடியில் ஒருங்கிணைந்த பல்பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு அமைப்பு! பேரிடர் காலங்களில் பொதுமக்கள், அவர்தம் வாழ்வாதாரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பல்பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு அமைப்பு செயல்படுத்தப்படும்.

Read Entire Article