TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

2 months ago 4
ARTICLE AD

தமிழக பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எரிசக்தி துறை அறிவிப்பில்,  'பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சூரிய மின்பலகைகள் பொருத்தும் வீட்டு நுகர்வோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது அவர்களின் மின்சாரக் கட்டணங்களைப் பெருமளவு குறைப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டின் மூலம் பசுமை மாற்றம் நிகழ்வதை சாத்தியப்படுத்தும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 இலட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அடுத்தாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு தனியார் கூட்டாண்மை முறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 20,000 பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் (RWAs) மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கும். இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பகிர்மானக் கட்டமைப்பை வலுப்படுத்தக் கூடிய மிக முக்கிய திட்டமாக கோயம்புத்தூர் அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் 4,000 கோடி ரூபாய் செலவில் அரசு தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்படுத்தப்படும். மேலும், சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக உயர் அழுத்த மின் பகிர்மானத் திறன் 1,390 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் தென் மண்டலத்திலிருந்து பசுமை எரிசக்தியைக் கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக விளங்கும் 1,187 கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் 1,640 கோடி ரூபாய் மதிப்பிலான விருதுநகர்-கோயம்புத்தூர் 765 கே.வி. மின் பகிர்மானத் திட்டங்களின் செயல்பாட்டை அரசு விரைவுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article