Tirupattur New Bypass: திருப்பத்தூர் மக்களின் தலைவலி தீரப்போகிறது.. வரப்போகிறது புதிய பைபாஸ் ரோடு - இனி பறக்கலாம்

2 months ago 6
ARTICLE AD

திமுக தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போல தயார் நிலையில் உள்ளதாகவும் கழகப் பணியாற்றுவதில் தமிழக முதல்வருக்கு கை வந்த கலை என ரூ.79 கோடி மதிப்பீட்டின் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டியபோது அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

புறவழிச்சாலை அமைக்கும் பணி துவக்க விழா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை ரூ.79 கோடி மதிப்பீட்டில் சுமார் 8.152 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

இதில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எவ.வேலு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, இந்த புறவழி சாலை அமைக்கப்பட்டால் கசிநாயக்கன்பட்டி, கதிரிமங்கலம், அச்சமங்கலம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் எனத் தெரிவித்தார்.

கழகப் பணி முதல்வருக்கு கைவந்த கலை

இதனைத்தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகள் வெற்றி பெற்றோம்,  ராணுவ வீரர்கள் போல திமுக தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். கழகப் பணியாற்றுவதில் தமிழக முதல்வருக்கு கைவந்த கலை எனப் பேசினார்.

இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி, மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வரும் 14ஆம் தேதி திமுக மாநாடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வரும் 14ஆம் தேதி திமுக பூத் கமிட்டி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் லட்சத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது.

Read Entire Article