The Goat: தி கோட் படத்தில் இன்னொரு குத்துப்பாட்டு... விஜயை வைப் செய்யவைத்த கங்கை அமரன்

1 year ago 7
ARTICLE AD

தி கோட்

வெங்கட் பிரபு காய் விஜய் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா, வைபவ், பிரேம்ஜி, லைலா, மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி கோட் படத்தின் தமிழ்நாடு மற்றும் கர்னாடகா திரையரங்க வெளியிட்டு உரிமத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் பெற்றுள்ளது. கேரளா வெளியீட்டு உரிமத்தை ஶ்ரீ கோகுலம் பிக்ச்சர்ஸ் பெற்றுள்ளது. ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.

தி கோட் படத்தில் குத்துப் பாடல் எழுதிய கங்கை அமரன்

#TheGreatestOfAllTime - "I Have written a Kuthu song in the film.. And #ThalapathyVijay said that the song was good and gave a jolly vibe.."

- Gangai Amaran in a Recent interview

So One More Kuthu Song Loading from Yuvan..🤙 pic.twitter.com/0vOO4gYeI4
— Laxmi Kanth (@iammoviebuff007) July 6, 2024

தி கோட் படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியாகிய விசில் போடு பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வெளியான சின்ன சின்ன கண்கள் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இப்பாடலில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் செயற்கை தொழில் நுட்பத்தின் வழியாக உருவாக்கப் பட்டுள்ளது.

தி கோட் திரைப்படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு குத்துப் பாடல் எழுதியிருப்பதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக கங்கை அமரன் ஒரு பாடலை எழுதி வருகிறார். இப்படியான நிலையில் கோட் படத்தில் தான் ஒரு பாடலை எழுதியிருப்பதாகவும் அந்த பாடல் தனக்கு ரொம்ப பிடித்ததாக விஜய் சொன்னதாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தி கோட் படத்தில் இன்னொரு குத்துப் பாடல் இருப்பதை தெரிந்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க :Indian 2 Kamal Haasan: நேதாஜி வழியில் இந்தியன் தாத்தா.. காந்தியின் பொறுமையை மறக்க வேண்டாம்.. கமல்ஹாசன் பளிச்!

Amstrong: ”வடசென்னையின் அரசன் வீழ்த்தப்பட்டார்” - பா.ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் உருக்கம்

Read Entire Article