பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஸ்கூட்டர், பைக், கார் என்று மின்சார வாகனங்களின் தயாரிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பில் டாடா நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. டாடாவின் வெற்றிகரமான தயாரிப்பான டியாகோ, பஞ்ச், நெக்ஸான், கர்வ் ஆகிய கார்களில் மின்சார கார் வேரியண்ட்களை தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர். அந்த கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

கார்கள்

ரொக்கத் தள்ளுபடி

எக்சேஞ்ச் ஆஃபர்

மொத்த தள்ளுபடி

Tiago EV

ரூபாய் 70 ஆயிரம்

ரூபாய் 30 ஆயிரம்

ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம்

Punch EV

ரூபாய் 60 ஆயிரம்

ரூபாய் 50 ஆயிரம்

ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம்

Nexon EV

ரூபாய் 20 ஆயிரம்

ரூபாய் 50 ஆயிரம்

ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம்

Curvv EV – Creative 45

ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம்

ரூபாய் 30 ஆயிரம்

ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம்

Curvv EV – Other Variants

ரூபாய் 3 லட்சம்

ரூபாய் 30 ஆயிரம்

ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம்

Harrier EV

ரூபாய் 1 லட்சம் ( லாயல்டி போனஸ்)

Tiago EV:

டாடா டியாகோ இவி காருக்கு மொத்தமாக ரூபாய் 1.50 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த காரின் ஆன்ரோட் தொடக்க விலை ரூபாய் 8.48 லட்சம் ஆகும். ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடியால் இந்த காரை ரூபாய் 7 லட்சத்திற்கும் குறைவாக வாங்கலாம்.

Punch EV:

டாடாவின் மின்சார காரில் வெற்றிகரமான கார் டாடா பஞ்ச் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.69 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 1.60 லட்சம் ஆகும். இந்த காரையும் இந்த தள்ளுபடியால் ரூபாய் 9 லட்சத்திற்கு வாங்கலாம்.

Nexon EV:

டாடாவின் மற்றொரு வெற்றிகரமான மின்சார கார் நெக்ஸான் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.41 லட்சம் ஆகும். இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 1.20 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளனர். இதனால், இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 12.20 லட்சமாக குறைந்துள்ளது.

Curvv EV:

டாடா நிறுவனம் தனது கர்வ் இவி காருக்கு தள்ளுபடியை வாரி வழங்கியுள்ளது. கிரியேட்டிவ் 45 வேரியண்ட்டின் விலை ரூபாய் 18.67 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. கர்வ் மின்சார காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.