Tata Discount: டாடா நிறுவனத்தின் செப்டம்பர் மாத சலுகையில் விற்பனையில் அசத்தும் தனது பெஸ்ட் மாடலான நெக்ஸான் மீது 75 ஆயிரம் ரூபாய்க்கான பலன்களை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான டாடா சலுகைகள்:

டாடா நிறுவனத்தின் இன்ஜின் அடிப்படையிலான கார் மாடல்களுக்கான செப்டம்பர் மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பலனை க்ராஸ்ஓவர் எஸ்யுவி ஆன கர்வ் மாடலும், அடுத்தபடியாக நெக்ஸானும் பெறுகிறது. இதுபோக ஆல்ட்ரோஸ், ஹாரியர், சியாரா டைகோர் மற்றும் 2026ம் ஆண்டுக்கு முந்தைய டைகோர் ஆகியவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பானது அண்மையில் அறிவிக்கப்பட்ட டாடா விலை உயர்வு அறிவிப்பில் இருந்து பயனர்களுக்கு சிறிய நிதிச்சுமையை குறைக்கக் கூடும். இந்த சலுகைகள் அனைத்தும் டீலர்கள் கைவசம் உள்ள இருப்பின் அடிப்படையிலானது என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

டாடா மாடல்கள் - ரூ.1.25 லட்சம் வரை சலுகை

1. டாடா கர்வ் - ரூ.1.25 லட்சம் வரை

கடந்த மாதத்தை போல இந்த செப்டம்பரிலும் டாடா கர்வ் மாடலானது ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களை பெறுகிறது. இதில் 30 ஆயிரம் பணத்தள்ளுபடி, 45 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் பெனிஃபிட் மற்றும் ரூ.50 ஆயிரம் லாயல்டி பலன் ஆகியவை அடங்கும். அண்மையில் தான் கர்வின் என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ஸ்பெக் ட்ரிம்களில் கூடுதல் அம்சங்களை வழங்கி, லைன் - அப்பை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2. டாடா நெக்ஸான் - ரூ.75 ஆயிரம் வரை

டாடா நிறுவனம் சார்பில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமமும் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ள நெக்ஸானிற்கு செப்டம்பரில் 75 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் - மேனுவல் ட்ரிம்களான ஸ்மார்ட்+. ஸ்மார்ட்+எஸ், ப்யூர் எஸ், ப்யூர்+, ப்யூர்+எஸ் மற்றும் ப்யூர்+பிஎஸ் ஆகியவற்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி, ரூ.45 ஆயிரம் இன்டெர்வென்சன் சலுகை மற்றும் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. மற்ற பெட்ரோல் ட்ரிம்களுக்கு 10 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.25 ஆயிரம் இன்டெர்வென்சன் சலுகை மற்றும் ஸ்க்ரேப்பேஜ் பலன் ரூ.20 ஆயிரம் என மொத்தம் 55 ஆயிரம் சலுகைகளை பெறுகின்றன. நெக்ஸானின் சிஎன்ஜி எடிஷனுக்கு 10 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.25 ஆயிரம் இன்டெர்வென்சன் சலுகை மற்றும் ஸ்க்ரேப்பேஜ் பலன் ரூ.25 ஆயிரம் என மொத்தம் 60 ஆயிரம் சலுகைகளை பெறுகின்றன. டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.25 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் பலன் வழங்கப்படுகிறது.

3. டாடா ஆல்ட்ரோஸ் - ரூ.55 ஆயிரம் சலுகை

ஆல்ட்ரோஸ் மாடலுக்கு அதிகபட்சமாக 55 ஆயிரம் வரை பலன்கள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் ட்ரிம் தவிர மற்ற பெட்ரோல் ட்ரிம்களுக்கு 15 ஆயிரம் பணத்தள்ளுபடி மற்றும் 20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் பலன் என மொத்தம் 35 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனுக்கு 15 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.20 ஆயிரம் இன்டெர்வென்சன் சலுகை மற்றும் ஸ்க்ரேப்பேஜ் பலன் ரூ.20 ஆயிரம் என மொத்தம் 55 ஆயிரம் சலுகைகளை பெறுகின்றன. இதன் டீசல் எடிஷனுக்கு 15 ஆயிரம் பணத்தள்ளுபடி, 20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் என மொத்தம் 35 ஆயிரத்திற்கான பலன் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்

டாடாவின் மற்ற கார்களுக்கான சலுகைகள் என்ன?

டாடா ஹாரியர் டீசல் எடிஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ஸ்க்ரேப்பேஜ் பெனிஃபிட் என 45 ஆயிரம் சலுகை அறிவிப்பு

டாடா சஃபாரி டீசல் எடிஷனுக்கும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ஸ்க்ரேப்பேஜ் பெனிஃபிட் என 45 ஆயிரம் சலுகை அறிவிப்பு

டாடா டைகோர் மாடலுக்கு பணத்தள்ளுபடி மற்றும் ஸ்க்ரேப்பேஜ் பலனாக தலா 15 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது

டாடா சியாரா மாடலுக்கு பணத்தள்ளுபடி, ஸ்க்ரேப்பேஜ் அல்லது லாயல்டி பலன் மூலமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலான சேமிப்பை பெற முடியும்

2026ம் ஆண்டுக்கு முந்தைய டைகோர் மாடலின் XE அல்லாத பெட்ரோல் & சிஎன்ஜி எடிஷன்களுக்கு 15 ஆயிரம் பணத்தள்ளுபடி, 5 ஆயிரம் இன்டர்வென்ஷன் சலுகை மற்றும் 15 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் பலன் என மொத்தம் 35 ஆயிரம் வரையிலான பலன் அறிவிக்கப்பட்டுள்ளது.