தமிழக சிறைகளில் அதிரடி தணிக்கை ஆய்வு! கூடுதல் ஏடிஜிபி சங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1 hour ago 1
ARTICLE AD

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக  தணிக்கை ஆய்வு செய்ய உள்ளோம்.  தேனியில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி சங்கர் பேட்டி.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ந்தேதி இரவு காவலர்களை தாக்கி மொத்தம் 17 கைதிகள் தப்பிச்சென்றனர். ஒரே நேரத்தில் இத்தனைகள் கைதிகள் தப்பியது பேசுபொருளாகிய நிலையில், இது சிறைத்துறையினரின் அலட்சியப்போக்கை வெளிக்காட்டியதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து படிப்படியாக 17 கைதிகளும் பிடிபட்டனர்.

சிறைக்கைதிகள் தப்பிய விவகாரத்தின் எதிரொலியாக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் அப்பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு அவர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புப்பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைத்துறை காவல் இயக்குநர் பதவி ஏடிஜிபி தரத்திற்கு குறைக்கப்பட்டு அப்பதவிக்கு ஏடிஜிபி சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் 17 சிறை கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் இன்று தேனி மாவட்ட சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் .

பின்னர் சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேக்கம்பட்டி சிறையில் இன்று ஆய்வு செய்தோம், இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில்  நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தணிக்கை செய்து மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோம், சிறைகளில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றதோ அதனை சரி செய்யப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை (SOS) 100% அமல்படுத்துவதை உறுதி செய்துள்ளோம் சிறைகளில் உள்ள குறைபாடுகள் தவிர்க்க சிறை காவலர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கி உள்ளோம், சிறை நடைமுறைகளை பின்பற்ற காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது அதனை பின்பற்றினால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.

Read Entire Article