Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை

3 weeks ago 4
ARTICLE AD

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை கூடியது - உறுப்பினர்கள் பதவியேற்பு

முதன்முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கோட் சூட்டுடன் தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் விஜய்..!

முதலமைச்சர் விஜய், அமைச்சர்களை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்

தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த, திமுக சட்டப்பேரவைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

அதிமுகவின் தலைமைப் பதவிக்கு நடக்கும் மோதல் - இரு குழுக்களாக சட்டப்பேரவைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

சட்டப்பேரவைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி -  எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வருகை தந்தனர்

முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சட்டப்பேரவையின் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை - ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை

திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் காவடி எடுத்துச் சென்ற போது நடந்த தகராறில் எட்டியலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்ற இளைஞர் அடித்தே கொலை - நன்னிலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது - அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் கணிப்பு

திருவள்ளூர் அருகே கொண்டமாபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - மூவர் கைது

கிருஷ்ணகிரி: பூவத்தி பகுதியில் சாலையோரம் இரு இளைஞர்கள் எரித்துக் கொலை; அரை கி.மீ இடைவெளியில் இரு சடலங்களுமே ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி என வனத்துறை தெரிவிப்பு

திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலைத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்

Read Entire Article