தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், காலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் நிலவுவதையும் உணர முடிகிறது. இந்நிலையில், சில பகுதிகளில் உறைபனிகூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் எந்த பகுதிகளில், வானிலை எப்படி இருக்கும் என்பதாக குறித்தான தகவலை, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக:

03-01-2025 மற்றும் 04-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

05-01-2025 மற்றும் 06-01-2025:

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

07-01-2025:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08-01-2025:

கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09-01-2025:

வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read: Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.