நடிகர் சூர்யா நடித்து வரும் அவரின் 46வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி அப்டேட் கொடுத்துள்ளார்.

சூர்யா 46வது படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கடைசியாக ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக கங்குவா படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து நடித்து வரும் கருப்பு படத்தை மிகப்பெரிய ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சூர்யாவின் 46வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தமிழில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த வெங்கி அட்லூரி முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படவில்லை. எனினும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். சூர்யா 46 படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தயாரிப்பாளர் நாகவம்சி இந்த படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ரிலீஸ் தேதி எப்போது?

கருப்பு படம் வெளியான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின் சூர்யா 46 படம் தியேட்டரில் வெளியாகும். இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்தப்பட்சம் இடைவெளி வேண்டும் என படக்குழு நினைக்கிறது. கருப்பு படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சூர்யா 46 படம் வெளியாகும் என நினைக்கிறேன். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் 5 நாள் ஷூட்டிங் மட்டும் உள்ளது. இதனால் 2026ம் ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கப் போகிறது.

Producer #NagaVamsi:
"#Suriya46 will release in theatres 3-4 after the release of #Suriya’s #Karuppu. We want to maintain a sufficient gap between Karuppu & Suriya46 release. Karuppu likely to be released in April 2026 and we can expect Suriya46 either in July or August🤝
The… pic.twitter.com/xq6BnpEMEf

— AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026

ஏற்கனவே 2026ம் ஆண்டு தொடங்கிய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 24 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த மௌனம் பேசியதே படம் ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது 46வது படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

கருப்பு படம் பிரச்னை

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி சுப்பிரமணியன், ஸ்வாசிகா, ஷிவதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்க சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஷூட்டிங் நிறைவுற்று படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் ஓடிடி உரிமம் விற்பதில் சிக்கல் நிலவி வருவதால் படம் ரிலீசாகமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.