மீண்டும் பெண்கள் பின்னோக்கிச் செல்லாமல் இருக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்துள்ளர்,

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின் மீது பாமக சட்டமன்றக் குழுவின் தலைவரும் எம்எல்ஏவுமான செளமியா அன்புமணி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தவெகவின் ஏராளமான வாக்குறுதிகள் அனைத்தும் பாமகவின் வாக்குறுதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிகளை ஒட்டிய பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூடியதற்கு நன்றி. ஆனால் வழக்கத்தில் 1 கடையை மூடினால் , 4 டாஸ்மாக் கடைகள் சந்துகளில் திறக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் பெண்கள் டாஸ்மாக் வழியாகப் பயணிக்க நேரும்போது, தலைகுனிந்து செல்கின்றனர். இப்போதுதான் பெண்கள் பல அடக்குமுறைகளில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர். மீண்டும் பெண்கள் பின்னோக்கிச் செல்லாமல் இருக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

பாமக வாக்களிக்கவில்லை

சிங்கப்பெண் தடுப்புப் படைகளை உருவாக்கியதற்கு நன்றி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில்கொண்டு முதல்வர் விஜய் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் விலகி இருக்க பாமக விரும்புகிறது. அதனால் பாமக ஓட்டெடுப்பில் இருந்து விலகி நிற்கிறது.

இவ்வாறு சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.