Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்

3 months ago 6
ARTICLE AD

Skoda Best Mileage SUV Kylaq: ஸ்கோடா கைலாக் கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யுவி பிரிவில் பயனர்களால் விரும்பி ஓட்டக்கூடிய மாடல்களில் ஒன்றாக ஸ்கோடாவின் கைலாக் திகழ்கிறது. இதுநாள் வரை அதன் செயல்திறனுக்காக அந்த கார் கொண்டாடப்பட்டாலும், எரிபொருள் சிக்கனத்திற்காக பெரிய அளவில் பேசப்பட்டது இல்லை. ஆனால், அந்த சூழல் விரைவில் மாறும் என கூறப்படுகிறது. காரணம் கைலாக் மாடலில் சிஎன்ஜி எடிஷனை சந்தைப்படுத்த ஸ்கோடா பரிசீலித்து வருகிறதாம். அதன் வாயிலாக ப்ராண்ட் சார்பில் அதிகம் மைலேஜ் வழங்கும் கார் மாடலாக உருவெடுக்க உள்ளதாம்.

ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி எடிஷன்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, கைலாக் கார் மாடலில் ரெட்ரோ ஃபிட்டட் அல்லது டீலர் தரப்பில் ஃபிட் செய்யப்படும் சிஎன்ஜி கிட்டை வழங்க ஸ்கோடா நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம். சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுக்கான தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் பயனர்களின் பிரதான தேர்வுகளில் ஒன்றாக மாறி வருகிறது.  இதுநாள் வரையில் சிஎன்ஜி பிரிவில் நுழைவதை தவிர்த்து வந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையானது ஸ்கோடாவை சிஎன்ஜி ஆப்ஷனை நோக்கி உந்தி தள்ளுகிறதாம். கைலாக்கின் CNG கிட்டானது 1.0-லிட்டர் TSI இன்ஜின் எடிஷனில் இடம்பெற உள்ளது. எரிபொருள் சிக்கனம் ஒருபோதும் கைலாக்கின் பலமாக இருந்ததில்லை என்ற சூழலில், இந்த CNG ஆப்ஷனானது வருங்கால வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கக்கூடும்.  அதாவது ஒரு கிலோவிற்கு 22 முதல் 24 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை வழங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கைலாக் - ரேஞ்ச்

ஸ்கோடா கைலாக் தற்போது பெட்ரோல் எடிஷனில் மட்டுமே கிடைக்க, லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டேங்கை நிரப்பினால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரமும், நெடுஞ்சாலை பகுதிகளில் 750 முதல் 850 கிலோ மீட்டர் தூரமும் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இரண்டு சூழலும் கலந்த சாலையில் 550 முதல் 650 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியுமாம். ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் இந்த ரேஞ்சானது சற்றே ஏறக்குறைய மாறுபடலாம். சிஎன்ஜி எடிஷன் சுமார் 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.

ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி - அம்சங்கள், வசதிகள்

CNG மாடல்களில் டார்க்-கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படுவது மிகவும் அசாதாரணமானது என்பதால், இதில் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. கைலாக் மாடலில் ஒரு வழக்கமான ஒற்றை CNG டேங்க் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேங்க் இருப்பதால் பூட் ஸ்பேஸ் பெருமளவில் குறையுக்கூடும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஸ்டாண்டர்ட் மாடலில் உள்ள பெரும்பாலான உபகரணங்களைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடும். தோற்றமும் மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்

ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி - விலை, போட்டியாளர்கள்

ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய விலையானது ரூ.7.59 லட்சத்தில் தொடங்கி ரூ,12.99 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.  சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டவை வழக்கமான  வேரியன்ட்களை விட ரூ. 75,000 முதல் ரூ. 90,000 வரை கூடுதல் விலையில் விற்கப்படலாம். இந்த விலை நிர்ணயம், ஃப்ராங்க்ஸ், நெக்ஸான் மற்றும் ப்ரேஸ்ஸாவின் சிஎன்ஜி எடிஷன்களுடன் உள்ளூர் சந்தையில் போட்டியிட உள்ளது. கைலாக் சிஎன்ஜியின் வெளியீடு 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதியில் நிகழலாம்.

Read Entire Article