Siragadikka Aasai: சீதா கல்யாணத்தால் பிரிந்த முத்து - மீனா.. கடுப்பான ரசிகர்கள்.. அடுத்த நடக்க போவது என்ன?

5 months ago 5
ARTICLE AD

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் 5 இடத்தை பிடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற சீரியல்களை காட்டிலும் இதில் வரும் முத்து - மீனா ஜோடியை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது மீனாவின் தங்கை கல்யாணத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த முத்து திடீரென சம்மதம் தெரிவித்திருந்தார். இன்று வெளியான புதிய புரோமோவில் மீனாவும் - முத்துவும் பிரிந்தது பாேன்ற  காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

அருண் - முத்து மோதல்

ஆரம்பத்திலிருந்தே முத்துவிற்கும் போலீசாக வரும் அருணுக்கும் முட்டலும் மோதலுமாக இருந்து வருகிறது. இதனால், முத்துவிற்கு அருணை கண்டாலே பிடிக்காது. முத்துவின் காரை பிடித்து தகராறு செய்ததன் விளைவுதான் இதற்கு காரணம். அருணின் அம்மா ஒரு நோயாளி இவரை கவனிக்க வரும் மீனாவின் தங்கை சீதாவுக்கும் அருணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிவிடுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிய வர முத்து எதிர்க்க தொடங்குகிறார். அருணை திருமணம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சீதாவிற்கு அவனை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்று தெரிவிக்க இதற்கு சீதா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

முதல் திருமணம்

அருணை புரிந்துகொண்ட முத்து சீதாவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததும், மீனாவின் குடும்பமே மகிழ்ச்சி அடைகிறது. சீதா - அருண் திருமணம் கோலாகலமாக நடக்க இருந்த நேரத்தில்  அருணுக்கும் சீதாவிற்கு ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துவிட்டது என்பது முத்துவிற்கு தெரியவருகிறது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை முத்துவிற்கு கொடுத்த நிலையில், மீனாதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்பது தெரிந்தவுடன் முத்து உடைந்து போகிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பும் அதிகரித்த நிலையில், முத்துவை விட்டு மீனா பிரிவது போன்ற புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தங்கை கல்யாணத்தால் பிரிந்த முத்து - மீனா

புதிய புரோமோ வீடியோவில்,  இனி நான் உன்னுடைய குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டேன், உன் குடும்பத்தை பார்க்க இனி நான் வரவே மாட்டேன் என முத்து கூறிவிடுகிறார். அதே போல் நீயும் இனி என் வீடு பக்கம் வந்துவிடாதே என முத்து கூறியது, மீனாவிற்கு தனது தலையில் இடி இறங்கியது போல் ஆகிவிட்டது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்து என்ன நடக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். இப்போது சண்டையே ஆரம்பம் என்று பலரும் கருத்து தெரிவி்ககின்றனர்.

முத்து செய்வது சரியா?

மீனாவிற்கு கணவனாக இருந்தாலும் முத்து அதிகப்பிரசங்கி தனமாக தலையிடுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் சீதாவின் விருப்பம். இதில், மீனாவை பழிவாங்குவது சரியல்ல என்றும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். முத்து செய்யும் சில அலப்பறைகள் சகிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

Read Entire Article