Siragadikka Aasai serial August 17 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 17 ) எபிசோடில் மனோஜ் ரோகிணிக்கு தாலி செயின் வாங்கி வந்தது போல விஜயாவுக்கு பட்டு புடவை வாங்கி வந்து இருக்கிறான். அதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறாள்.

முத்து : "உன்னை உழைச்சு படிக்கவைக்க அப்பாவுக்கு எதுவும் வாங்கி வரலையா?"

மனோஜ்: அதெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்"என வாட்சை எடுத்துக்காட்ட

"விஜயா : அவருக்கு எதுக்குடா வாட்ச் அவர் என்ன வேலைக்கா போயிட்டு இருக்கார்'' என நக்கலாக சொல்கிறாள்.

"மனோஜ் : நான் ஒரு பிசினஸ் மேன் இது எனக்காக வாங்கிட்டு வந்து இருக்கேன்" என்கிறான்.

"விஜயா : இது என்ன மனோஜ் ஒரு ஆயிரம் ரூபாய் இருக்குமா?

மனோஜ் : இதோட விலை 51 ஆயிரம் "என மனோஜ் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இப்படி இவன் செலவு செஞ்சா கொடுக்க வேண்டிய 27 லட்சம் எப்படி கொடுப்பான் என் முத்து கேட்கிறான். "அதெல்லாம் நாங்க கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுவோம்" என்கிறாள் ரோகிணி.

அவர் இப்பவே ரொம்ப செலவு பண்றார் என மீனா சொல்ல அதை பத்தி உனக்கு என்னடி பிரச்சனை" மீனாவை திட்டுகிறார் விஜயா.

"அண்ணாமலை: நல்லா வந்தா சந்தோஷம் தான். இத்தோட இந்த பிரச்சினையை விடுங்க "என்கிறார்

அண்ணாமலைக்காக மனோஜ் ஒரு துண்டு வாங்கி வந்து கொடுக்கிறான். எனக்காக நீ இது வாங்கி வந்து தந்ததற்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் அண்ணாமலை

ரோகிணி மனோஜிடம் இந்த பொருட்களை எல்லாம் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என கேட்கிறாள். பேங்க்ல கொடுத்த கிரெடிட் கார்டை வைத்து இதெல்லாம் வாங்கினேன் என்கிறான் மனோஜ்.

ஆன்ட்டிகாக துணி தானே வாங்கி கொடுத்த நல்ல விஷயம் தான். எங்க எனக்கு முன்னாடி மீனாவுக்கு முத்து செயின் வாங்கி கொடுத்துடுவானோ என பயந்துகிட்டு இருந்தேன். கிரெடிட் கார்டு பில்லை ஒழுங்கா கட்டிடு என்கிறாள் ரோகிணி.

நாம ரெண்டு பேரும் சேர்ந்து கோவா போயிட்டு வந்துடலாம் என்கிறான் மனோஜ்.

பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காத ஒரு நபர் வீட்டுக்கு சென்று சிட்டி ரகளை செய்கிறான். அந்த வீட்டில் அவரின் மனைவியை மிரட்டுகிறான் சிட்டி. அப்போது அந்த நபர் முத்துவின் காரில் சவாரிக்காக வந்தவர் வீட்டில் வந்து இறங்கியதும் சிட்டி வந்து மிரட்டுவதை பார்த்து அவனிடம் கொஞ்சம் டைம் கொடுக்க சொல்லி கெஞ்சி கேட்கிறார். அப்பவும் சிட்டி மோசமாக பேச முத்து வீட்டுக்குள் வந்து பார்க்கிறான்.

" நீ பேசியதெல்லாம் வீடியோவாக இருக்கிறது இதை போலீஸுக்கு அனுப்பவா" என சிட்டியை மிரட்டி அவனிடமிருந்து ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். சிட்டியுடன் சத்யாவும் வந்திருந்ததால் அவனையும் விரட்டி அனுப்புகிறான் முத்து. இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.