தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (Sports Development Authority of Tamil Nadu (SDAT)) காலியான உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபிஸ்ட் (Sports Physiotherapist) -1

கல்வித் தகுதி:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் இருந்து ஃபிசியோதெரபி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

10th + HSC or its equivalent + இளங்கலை பட்டம் + முதுகலை பட்டம் என்ற முறையில் படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ. 35,900 – 1,13,500/- (Level 13)

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், பிற்படுத்தப்ப்பட்டோர்/ மிக பிற்படுத்தப்பட்டோர்/ DC ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 57 ஆகும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இந்தப் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு, ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபியில் ப்ராக்டிகல் டெஸ்ட், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.sdat.tn.gov.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய வேண்டும். பின்னர், அதை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ் நகல்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஏதாவது ஒரு அடையாள சான்று

10-வது மதிப்பெண் சான்றிதழ்

12-வது மதிப்பெண் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்

சிறப்புப் பிரிவு சான்றிதழ் (தகுதியுடையவராக இருந்தால்)

இளங்கலை பட்டம்

முதுகலை பட்டம்

அனுபவ சான்றிதழ்

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டு probationary period காலம். அதன்பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,
Sports Development Authority of Tamil Nadu,
Jawaharlal Nehru Stadium,
Raja Muthiah Road, Periyamet,
Chennai – 600 003.

எழுத்துத் தேர்வு மையம், நேர்முகத் தேர்வு குறித்து கூடுதல் விவரங்களை காண https://sdat.tn.gov.in/storage/sdat-website-assets/2c9c2382-aea0-4dda-aa2b-200024fe0208.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.07.2024 மாலை 5 மணி வரை