Rule Change Jan 1st 2025: இந்தியாவில் வரும் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள பல்வேறு புதிய விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜன. 1 முதல் புதிய விதிகள்:

2024 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. புத்தாண்டுடன், பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளன. இது குடும்பங்கள், தொழில்கள், பயணிகள் மற்றும் நிதி பரிவர்த்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் மொபைல் டேட்டா கட்டணங்கள், விசா செயல்முறைகள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உள்ளடக்கியுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2025 முதல் உங்கள் பட்ஜெட் மற்றும் திட்டமிடலைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி இணக்கத்தில் முக்கிய மாற்றங்கள்:

ஜிஎஸ்டி இணக்கத்தில் பல முக்கியமான மாற்றங்கள் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இந்தியாவில் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மாற்றங்கள், ஜிஎஸ்டி செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் மோசடியை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

1. கட்டாய MFA (மல்டி-ஃபாக்டர் அங்கீகாரம்): GST போர்ட்டல்களில் பாதுகாப்பை அதிகரிக்க அனைத்து வரி செலுத்துவோருக்கும் MFA கட்டாயமாக இருக்கும்.

2. இ-வே பில் கட்டுப்பாடுகள்: இ-வே பில்களை (EWBs) 180 நாட்களுக்கு மேல் இல்லாத அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே உருவாக்க முடியும்.

புதிய அமெரிக்க விசா நியமன விதிகள்

இந்தியர்களுக்கான அமெரிக்க விசா நிவாரணம்: ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா விண்ணப்பதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஒரு முறை அப்பாயின்மெண்டை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும். மேலும் கூடுதல் அப்பாயின்மெண்டிற்கு மீண்டும் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும்.

H-1B விசா மாற்றியமைத்தல்: ஜனவரி 17, 2025 முதல், புதிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விதிகள், H-1B செயல்முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, முதலாளிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், இந்திய F-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சுமூகமான மாற்றங்களையும் வழங்கும்.

நீண்ட காத்திருப்பு நேரங்கள் தொடரும்: இந்தியாவில் விசா நியமனம் காத்திருப்பு நேரங்கள் அதிகமாகவே உள்ளன. B1/B2 விசாக்கள் சராசரியாக 400 நாட்களுக்கு மேல் இருக்கும்.

மொபைல் டேட்டா முக்கிய விதி மாற்றங்கள்

தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள், பொது சொத்துகளில் நிலத்தடி தகவல்தொடர்புகளின் கட்டுமானம், பயன்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் முறை ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். புதிய விதிகள் Jio, Airtel, Vodafone மற்றும் BSNL போன்ற தொலைத்தொடர்பு வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தவும், மொபைல் டவர் நிறுவல்களை விரிவுபடுத்தவும் உதவும்.

வாட்ஸ்-அப் செயலிக்கு கட்டுப்பாடு:

ஜனவரி 1, 2025 முதல் பழைய ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp சேவை கிடைக்காது. அதன்படி,

Samsung: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini

HTC: One X, One X+, Desire 500, Desire 601

சோனி: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V

LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90

மோட்டோரோலா: Moto G, Razr HD, Moto E (2014) ஆகிய சாதனங்களில் வாட்ஸ்-அப் சேவை ஜனவரி 1 முதல் கிடைக்காது.

கார் விலை உயர்வு:

ஜனவரி 1, 2025 முதல், Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, Mercedes-Benz, Audi மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களின் விலை அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை உயர உள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பதே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டால், நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அமேசானில் மாற்றம்:

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பில் ஜனவரி 1, 2025 முதல் புதிய விதிஅமலுக்கு வரும். அதன்படி, பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். யாராவது மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தாவை எடுக்க வேண்டும். முன்னதாக, பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் இருந்து வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.