Rasi Palan Today (21-07-2026): ஆடி முதல் செவ்வாய்.. இன்று மகரத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு என்ன பலன்?

3 months ago 6
ARTICLE AD

Today  Rasi Palan: ஜூலை 21ம் தேதியான இன்று ஆடி மாதம் 5ம் தேதியாகும். ஆடி செவ்வாய் விசேஷ நாளான இன்று வளர்பிறை அஷ்டமி திதி உள்ளது. இந்த நன்னாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றிக் காணலாம்.

இன்றைய ராசிபலன்கள் (ஜூலை 21)

மேஷம்

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களைக் கவர்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியத் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும்.

மிதுனம்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும்.

கடகம்

மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். தெளிவற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சபை பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்தாமல் இருக்கவும். சவாலான செயல்களில் சிந்தித்து செயல்படவும்.

சிம்மம்

மனதளவில் இருந்த வருத்தங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. நிர்வாக சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் இருந்த குழப்பங்கள் விலகும்.

துலாம்

முகத்தில் புதிய பொலிவுகள் உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்த மந்த தன்மைகள் விலகும். மற்றவரிடம் எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். புதிய நபர்களின் கருத்துகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

தனுசு

கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணியிருந்த காரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மகரம்

மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள். வியாபார அபிவிருத்தி சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

வியாபார நிமித்தமான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும்.

Read Entire Article