ஆகஸ்ட் மாதத்தின் 12ம் தேதியான இன்றைய நாள் ஆடி மாத அமாவாசையாகும். இன்றைய நாளில் காலை 9.10 மணி வரை பூசம் நட்சத்திரமும், அதன்பின் ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்

நாள்: 12.08.2026 - புதன்கிழமை

திதி: அமாவாசை

நட்சத்திரம்: இரவு 9.10 வரை பூசம், அதன்பிறகு ஆயில்யம்

நல்ல நேரம்:

காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

இராகு:

மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை

குளிகை:

மதியம் 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்:

காலை 07.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் (ஆகஸ்ட் 12)

மேஷம்

உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அரசு உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும்.

ரிஷபம்

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம் பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் மற்றும் சிந்தனைகள் மேம்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.

கடகம்

செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிரவும். சஞ்சலங்களால் மனதளவில் குழப்பங்கள் அதிகரிக்கும். வரவுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பேச்சுகளில் பொறுமையை கையாளவும்.

சிம்மம்

வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். கனிவான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பிறமொழி மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பொன் பொருட்கள் கையாள்வதில் கவனம் வேண்டும்.

கன்னி

இணைய தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும்.

துலாம்

நண்பர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயப் பணிகளில் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் நீங்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். காப்பீட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல்கள் ஏற்படும்.

மகரம்

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிறு கடன்களை அடைப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கும்பம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபமும் வாய்ப்புகளும் அமையும். இலக்கியம் பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத் திறன் மேம்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும்.

மீனம்

இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகள் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் அலைச்சலும் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.