Rajini 173: தெலுங்கு இயக்குநர் படத்தில் ரஜினி?.. ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது தெரியுமா?

5 months ago 4
ARTICLE AD

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை இளம் இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கூலி ரிலீஸ்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விக்ரம் படத்தை போன்றே மல்டி ஸ்டார் படமாக உருவாகியிருக்கிறது. வழக்கமான கதையாக இருந்தாலும், சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பது போன்ற உணர்வை தரும் வகையில் கூலி படத்தை இயக்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இன்றைய சூழலில் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே படத்தில் நடிப்பது பெரிய அளவில் வசூலை ஈட்டவும் கை கொடுக்கிறது. அந்த வகையில் ரஜினி லோகேஷ் கனகராஜை முழுமையாக நம்பியிருக்கிறாராம். ஓடிடி மற்றும் சாட்டிலைட் ரைட்ஸில் இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினி படங்கள் விற்பனையாகியிருக்கிறது.

ஜெயிலர் 2

கூலி படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினி ரெஸ்ட் ஏதும் எடுக்காமல் உடனடியாக ஜெயிலர் 2 படத்திற்கான முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர் கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் என மாறி மாறி நடித்து வருகிறார். ஜெயிலரை காட்டிலும் ஜெயிலர் 2 இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ பாலையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக பாலையா - ரஜினி காம்போவை தியேட்டரில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.

தெலுங்கு இயக்குநர் படத்தில் ரஜினி

ஜெயிலர்  2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை ஒத்துழைப்பை பொறுத்தே படத்தில் நடிப்பார் என்றும் குறைந்தது 2 மாதம் ஓய்வுக்கு பிறகே படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை வைத்து தெலுங்கு இயக்குநர் ஒரு கதையை ஓகே செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு நானி நடிப்பில் வெளியான சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா ரஜினி படத்தை இயக்க இருக்கிறாராம். த்ரில்லர் ஜானரில் ரஜினி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Entire Article