தமிழக வெற்றிக் கழகம் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் பதவியேற்ற நாளில் தவெக ஆட்சி வெளிப்படையாக இருக்கும் என சொன்னீர்கள். அரச குடும்பத்தில் இல்லாமல் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் என கூறினீர்கள். அதனை அனைவரும் வரவேற்றோம். நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த சட்டப்பேரவையில் மன வேதனையோடு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத ஒரு விஷயங்களைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. பதவியேற்பு விழாவில் முகமூடி அணிந்து செல்லாமல் வெளிப்படையான ஆட்சி என சொன்னீர்கள். அப்படியிருக்கையில் உங்களை சந்திக்க முகத்தை மூடி வந்தது யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கு காரணம் குதிரைப்பேரம் என்றால் அதை விட தலைகுனிவு இந்த அரசுக்கு கிடையாது என தெரிவித்தார்.

பேரம் பேசியே சோரம் போன திருமதி பிரேமலதா அவர்கள்!குதிரை பேரத்தை பற்றிபேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குசமம்!

கேப்டனின் தொண்டர்களை கூறு கட்டி திமுகவிடம் விற்ற தேர்ந்தெடுத்த தேர்தல் வியாபாரி திருமதி பிரேமலாதவை கேப்படனின் ஆன்மா மன்னிக்காது!

குதிரைப்பேரம் பேச வேண்டிய அவசியம்…

— jagadesan pandian (@apjagadesan) May 13, 2026

பிரேமலதாவின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக உள்ள லயோலா மணி பதிவு ஒன்றை சமூக வலைத்தளம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய பிரேமலதா இன்று சட்டமன்றத்தில் பேசியது சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்? நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு? வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா? குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோல் சங்கராபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட தவெக நிர்வாகி ஜெகதீச பாண்டியன் தனது பதிவில், “பேரம் பேசியே சோரம் போன பிரேமலதா அவர்கள் குதிரை பேரத்தை பற்றிபேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குசமம்! . கேப்டனின் தொண்டர்களை கூறு கட்டி திமுகவிடம் விற்ற தேர்ந்தெடுத்த தேர்தல் வியாபாரி பிரேமலாதவை கேப்படனின் ஆன்மா மன்னிக்காது! குதிரைப்பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! எங்கள் வெற்றித் தலைவர் தளபதி ஜோசப் விஜய் அவர்களின் தலையில் தமிழக மெங்கும் நடந்த விசில் புரட்சியால் வென்றவர்கள் நாங்கள்” என தெரிவித்துள்ளார்.