Nissan SUV: லிட்டருக்கு 36 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் ஜப்பான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மைலேஜ் பிரியர்களுக்கான எஸ்யுவி

புதிய கார் வாங்க விரும்புபவர்கள் அனைவருக்கும், நாம் தேர்வு செய்யும் கார் என்ன மைலேஜ் அளிக்கும் என்பது முக்கிய கேள்விகளில் ஒன்றாக இருக்கும். மைலேஜ் அம்சமே காரின் உரிமையாளருக்கு ஒரு மகிழ்வான கொள்முதலை உறுதி செய்கிறது. அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. காரணம் ஒவ்வொரு எஸ்யுவி ஆர்வலரும் ஆச்சரியப்படும் வகையிலான மைலேஜ் விவரங்கள் புதிய காரில் இடம்பெற்றுள்ளன. அந்த சிறந்த மைலேஜ் எஸ்யுவி தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறந்த மைலேஜ் எஸ்யுவி..

நிசான் நிறுவனம் அண்மையில் தனது அதிநவீன தலைமுறை இ-பவர் சிஸ்டம் பொருத்தப்பட்ட புதிய காஷ்காய் காரை சோதனை செய்தது. அதன் முடிவு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. அந்த எஸ்யுவி, எந்தவிதமான வெளிப்புற சார்ஜிங் அல்லது எரிபொருள் நிரப்புதல் இல்லாமலேயே, ஒரே ஒரு முறை டேங்கை நிரப்பியே ஆயிரத்து 980 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. பொதுவாக வாகன உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சோதனைகளுக்குப் மாறாக, நிஜ உலக ஓட்டுநர் சூழல்களிலேயே நிசான் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் போது கிடைத்த மைலேஜ் விவரங்களை ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.ஆனால் இந்த எஸ்யுவியின் 55-லிட்டர் எரிபொருள் டேங்க் அடிப்படையில், ஒரு லிட்டருக்கு சுமார் 36 கிலோ மீட்டர் ஆக பதிவாகியுள்ளது.

காஷ்காய் உலக சாதனை பயணம்:

கொலம்பியாவில் கடந்த ஜுலை 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையில், பகோடா பகுதியில் தொடங்கிய காரின் பயணம் கரீபியன் கடற்கரை வரை இடைநிற்றலின்றி பயணித்துள்ளது. இந்த வழித்தடமானது நெடுஞ்சாலைகள், நகர போக்குவரத்து மற்றும் பலதரப்பட்ட சாலை சூழல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஓட்டுநர்களின் சீரான பயணம் மற்றும் திறமையான வேகக் கட்டுப்பாடு ஆகியவற்றின் கலவையால், இ-பவர் அமைப்பின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. வெளிப்புற சார்ஜிங் அல்லது எரிபொருள் நிரப்புதல் இல்லாமல், ப்ளக்-இன் அல்லாத நீட்டிக்கப்பட்ட வரம்பு கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட பயணம் என இந்தப் பயணம் தற்போது அழைக்கப்படுகிறது.

E-Power சிஸ்டம் என்றால் என்ன?

வழக்கமான ஹைப்ரிட் அமைப்பில், பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டார் ஆகிய இரண்டும் சக்கரங்களை இயக்கும். ஆனால், இ-பவர் அமைப்பில், சக்கரங்கள் பிரத்தியேகமாக ஒரு மின்சார மோட்டாரால் இயக்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் ஒரு ஜெனரேட்டராகச் செயல்பட்டு, பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கும் மின்சார மோட்டாரை இயக்குவதற்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இவை அனைத்தும் இணைந்து, வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்: Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?

இந்தியாவிற்கு வருமா?

நிசான் நிறுவனம் இந்தியாவில் இ-பவர் தொழில்நுட்பத்தை வழங்குவதை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், உள்ளூர் சந்தையில் அடுத்த சில ஆண்டுகளில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. வரவிருக்கும் இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றில் இந்த புதிய அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால், அதிக மைலேஜ் தரும் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமையும்.